இந்தக்கால பெண்கள் பெரிதும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று PCOD. அதாவது கர்ப்பப்பைகளில் ஏற்படும் நீர்க்கட்டிகள். இந்த பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருப்பது முறையற்ற மாதவிடாய் சுழற்சி. ( Irregular Periods)
27 நாட்கள் சுழற்சியில் வர வேண்டிய Periods 2 மாதங்கள் கழித்து வந்தாலும் பல பெண்கள் இதனைக் கண்டு கொள்வது இல்லை. இவ்வாறு அசால்ட்டாக இருப்பது தான் பின்னாளில் PCOD போன்ற பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் Menstrual Cycle சரியாக இருந்தாலே அந்தப் பெண் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம்.
எனினும் முறையற்ற உணவு பழக்கம், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது, அதிக வேலைப்பளு, Fast Food போன்றவையும் Periods பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். இதற்காக நாம் பயப்படத் தேவையில்லை. வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய, அதே நேரம் குறைந்த செலவில் நம்மால் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
இதற்கு வேண்டியது ஒரே ஒரு பொருள் தான். ஒட்டுமொத்த மாதவிடாய் சார்ந்த பிரச்சனையையும் சரி செய்யக் கூடியது. அது என்னவெனில் அன்னாசிப்பூ. அதாவது ஆங்கிலத்தில் Star Anise. தெற்கு சீனாவில் முதலில் உருவான இந்த அன்னாசிப்பூ தற்போது இந்தியா மற்றும் சீன நாட்டு உணவுகளில் அதிகளவு பயன்படுத்தப் படுகின்றது.
பொதுவாக நம் வீடுகளில் பிரியாணி செய்யும் போதோ, குருமா போன்ற கிரேவி ஐட்டம்களில் நாம் இந்த அன்னாசிப்பூவை பயன்படுத்துவோம். பட்டை, சோம்பு சேர்க்கும் போது இதையும் நாம் நல்ல நறுமணத்தை அளிப்பதற்காக சேர்ப்போம். ஆனால் நறுமணத்தையும் தாண்டி பல நன்மைகளை இந்த அன்னாசிப்பூ நமக்கு அளிக்கிறது.
இப்போது இந்த அன்னாசி பூ வைத்து மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய டீ எவ்வாறு செய்வது என்பதைப் பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருள்கள்
1. அன்னாசி பூ ( Star Anise)
2. பெருங்காயம் ( Asafoetida
3. தேன் ( Honey )
முதலில் ஒரு வாணலியில் அன்னாசி பூவை இளம் சூட்டில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் அதனை பொடி செய்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாத்திரத்தில் 200ml நீரை எடுத்துக் கொண்டு அதை சூடாக்க வேண்டும். அந்த நீரில் அரை டீஸ்பூன் அன்னாசி பூவினுடைய பொடி, கால் டீஸ்பூன் பெருங்காய பொடியினை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 200ml தண்ணீர் 100ml ஆக வற்றும் வரை கொதிக்க வைத்த பின் அதனை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துவிட்டால் அன்னாசிபூ டீ ரெடி.
இதனை காலை வேளையில் தினமும் பெண்கள் பருகும் போது விரைவிலேயே மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். மேலும் பல நன்மைகள் இந்த அன்னாசிப்பூ டீ குடிப்பதால் கிடைக்கிறது. அவைகளை இப்போது பார்க்கலாம்.
பல நன்மைகள்
1. குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த டீ குடிக்கும் போது தாய்ப்பால் சுரப்பிற்கு உதவுகிறது.
2. குளிர் காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி, இருமல் மற்றும் அதனால் உண்டாகக் கூடிய உடல் வலியினை சரிசெய்யக் கூடியது.
3. புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
4. ஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
5. அதிகளவு Antioxidants இருப்பதால் இளமையாக வைத்திருக்க உதவுவதுடன், எவ்வித தோல் நோய்கள் இருந்தாலும் இந்த Tea அதனை குணப்படுத்துகிறது.
பெண்களே.. இனி Periods சரியாக வரவில்லை என கவலைப்பட வேண்டாம். இந்த அன்னாசிப்பூ டீயை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் பலன் கொடுக்கும்.