Homemade Natural Lip Balm for Lighten your Dark Lips, Dry & Chapped Lips

உங்க உதடுகளை ரோஜாப்பூ மாதிரி பிங்க் கலர்ல பட்டுப்போல நிரந்தரமா மாத்தக்கூடிய லிப் பாம் (Lip Balm) வீட்டுலயே எப்படி செய்யுறதுன்னுதான் இப்போ நாம பார்க்கப்போறோம். 

பிங்க் கலர் உதடுகள் யாருக்கு தான் பிடிக்காது. ஆனா பலருக்கும் Pink Lips இருக்குறது இல்ல. அடிக்கடி உதடுகளை கடிப்பது, கண்ட கண்ட கெமிக்கல் கலந்த Lipstick பயன்படுத்துறது, புகைபிடித்தல், வைட்டமின் குறைபாடு, அதிக வெயில் அல்லது அதிக குளிர், இறந்த செல்கள் உதடுகளில் தங்கி விடுவது போன்ற பல காரணங்களால உதடுகள் வறண்டு வெடிப்பும் கருமை நிறமும் உண்டாகிறது.

அதேபோல நமக்கு உதடுகள் வறண்டு போனா முதல்ல நியாபகத்துக்கு வருவது லிப் பாம் தான். அதே Lipbalm நம்ம உதடுகளோட எல்லா பிரச்சனையையும் சரிபண்ணிட்டா எவ்வளவு நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே இயற்கையா எளிமையா நாம செஞ்சா இன்னும் அருமையா இருக்கும். அப்படி அட்டகாசமான Natural Home Made லிப்பாம் தான் இப்போ நாம பார்க்க போறோம். 

Homemade Natural Lip Balm for Lighten your Dark Lips, Dry Chapped Lips

இதற்கு தேவையான பொருட்கள்:

1. பீட்ரூட் பவுடர் ( Beetroot Powder) 

2. விளக்கெண்ணெய் ( Castor Oil) 

3. தேங்காய் எண்ணெய் ( Coconut Oil) 

பீட்ரூட் பவுடர் செய்முறை- How to Make Beetroot Powder : 

ஒரு பெரிய சைஸ் பீட்ரூட்டை எடுத்துக்கோங்க. அதை நல்லா கழுவி தோலை சீவிடுங்க. இப்போ இந்த பீட்ரூட்டை கேரட் துருவி வச்சு நல்லா துருவிக்கோங்க. இந்த பீட்ரூட் துருவலை ஒரு தட்டில் போட்டு அதை 2 நாட்கள் சூரிய ஒளியில ( Sun Light) காயவையுங்க. சூரிய ஒளியில வைக்க முடியலனா தட்டுல போட்டு ஃபேன் ( Fan) காற்றுல வெச்சா போதும். நல்லா பீட்ரூட் காய்ந்து விடும். எனினும் முடிந்த அளவு வெயிலில் காயவைக்க முயற்சி பண்ணுங்க. 

பீட்ரூட் துருவல் நல்லா காய்ந்ததும் அதனை மிக்சியில் அரைத்து நன்கு பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் பீட்ரூட் பொடி தயார்.

Note : காய்ந்த பீட்ரூட் துருவல்ல ஈரப்பதம் இருக்ககூடாது. இல்லனா பீட்ரூட் பொடிக்கு சீக்கிரம் வண்டு வந்து கெட்டு போயிடும். 

இப்போ Natural LipBalm செய்யும் முறையை பார்ப்போம்

ஒரு சின்ன பாத்திரம் எடுத்துக்கோங்க. அதுல ஒரு ஸ்பூன் பீட்ரூட் பொடி போட்டுக்கோங்க. அதோட ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக்கோங்க. பொதுவா விளக்கெண்ணெய் உங்க உதட்டுக்கு பளபளப்பை கொடுக்கும். அதோட Dry Lips ஓட வறட்சியை போக்க உதவும். அடுத்து ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கோங்க. உங்க உதடுகள்ல புண்கள் ஏற்பட்டு தழும்பு or வெடிப்பு இருந்தா அதை சரிபண்ணுற வேலையை தேங்காய் எண்ணெய் பார்த்துக்கும். இந்த கலவையை நல்லா Mix பண்ணா பேஸ்ட் மாதிரி மாறிடும். அவ்வளவு தான் நம்ம எல்லா உதடு சார்ந்த பிரச்சனையை சரிசெய்யக்கூடிய Home made Lip Balm ரெடி. 

இந்த லிப்பாம் எப்படி பயன்படுத்துறது இப்போ பார்க்கலாம் ( How to Use Home made Lip Balm) 

தினமும் இரவு தூங்க போறதுக்கு முன்னாடி இந்த லிப்பாம்மை நம்ம விரலால தொட்டு உதடுகள் மேல Apply பண்ணுங்க. லேசா ஒரு 3 நிமிடங்கள் மசாஜ் பண்ணுங்க. அப்படியே தூங்கிடுங்க. ராத்திரி முழுசும் உதடுகள்குள்ள இந்த Magic LipBalm இறங்கிடும். காலையில எந்திரிச்சு குளிர்ந்த நீரால் உதடுகளை கழுவிடுங்க. தினமும் இதை தொடர்ந்து பண்ணுங்க. ஒரு வாரத்துல உங்க உதடுகள்ல நல்ல மாற்றத்தை நீங்க பார்ப்பீங்க. 

இந்த லிப்பாமை ஒரு சின்ன கண்ணாடி பாட்டில்லயோ or காலியான சின்ன கிரீம் பாட்டில்லயே போட்டு பிரிட்ஜ் ல வச்சுக்கலாம். பிரிட்ஜ் இல்லாதவங்க வெளியில கூட வைக்கலாம். ஒரு வாரம் வரை தாராளமா Use பண்ணலாம்.அதுக்கு மேல நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. ஆனா லேசா எண்ணெய் வாசனை வர ஆரம்பிக்கும். அவ்வளவு தான். 

கண்டிப்பா இந்த HomeMade Lip Balm ட்ரை பண்ணி பாருங்க.. நிச்சயமா நீங்க ஆசைப்பட்ட ரோஜா உதடுகள் உங்களுக்கு கிடைக்க  வாழ்த்துக்கள்..!!