7 Natural Home Remedies To Remove Dry And Cracked Heels

மார்கழி மாதம் ஆரம்பிச்சாச்சு.. இனி நம்ம ஊருல மாசி மாதம் வரை குளிர் ரொம்பவே அதிகமா இருக்கும். பொதுவா கோடைக்காலம் மட்டும் கிடையாது குளிர் காலமும் நம்மளோட சருமத்தில அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. 

குளிர் அதிகமா இருக்கும் போது நம்ம சருமம் அதோட ஈரத்தன்மையை இழக்கும். அதுனால சருமத்தொட மென்மை தன்மை போய் சொர சொர ன்னு மாற ஆரம்பிச்சிடும். அதேசமயம் நிறைய நபர்கள் அவங்க முகத்தை கவனிக்கிற அளவு பாதங்களை கவனிக்கமாட்டாங்க. குளிர் தாங்காம முகமே சொர சொரன்னு மாறும் போது ஏற்கனவே கவனிக்க ஆள் இல்லாம இருக்குற நம்ம பாதங்கள் என்ன ஆகும்னு யோசிச்சு பாருங்க..

சரி.. சொர சொரன்னு வறண்டு இருந்துட்டு போ.. அப்படின்னு நம்ம பாதங்களை நம்மளால விட்டுட முடியாதுல்ல..!! அதே நேரம் pedicure பண்ண அதிக செலவு பண்ணி பார்லர் போகவும் தேவை இல்லை. ரொம்ப ஈஸியா நம்ம வீட்டுல செய்யக்கூடிய எளிய வழிகளை தான் இப்போ நாம பார்க்கப்போறோம். 

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான  தண்ணீர் எடுத்துக்கிட்டு அதில் கொஞ்சம் கல் உப்பு, எழுமிச்சை சாறு சேர்த்துக்கோங்க. அந்த நீரில் இரண்டு பாதங்களையும் 10-15 நிமிடங்கள் வச்சுறுங்க. இப்படி பண்ணும் போது கால் மிருதுவா மாறும். ஆனா இறந்த செல்கள், அழுக்கு பாதங்கள்ல இருந்து போயிருக்காது. அதுக்காக சின்ன பிரஷ் வச்சு பொறுமையா நகஇடுக்கு, வெடிப்பு இருக்குற இடங்கள்ல பொறுமையா தேய்ங்க. இப்படி பண்ணும் போது இறந்த செல்கள் வெளியேறி பாதம் சுத்தமா மாறிடும். பிரஷ்க்கு பதிலா எலுமிச்சை தோல் பயன்படுத்திக் கூட பாதங்களை தேய்க்கலாம். அதுக்கப்புறம் பாதங்களை நன்கு கழுவி சுத்தமான துணிவச்சு பாதங்களை துடைக்கணும். இந்த முறை செஞ்சு முடிச்சதும் மறக்காம நம்ம முகத்துக்கு பயன்படுத்துற வாசலின் அல்லது மாய்சரைசர் அல்லது ஜெல் இது மாதிரி ஏதாவது ஒன்னு தடவிட்டா போதும். இதை ஒருதடவை செஞ்சு பார்க்கும் போதே நல்ல ரிசல்ட் உங்களால பார்க்க முடியும். 

2. தினமும் தேங்காய் எண்ணெய், அல்லது பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் உங்க பாதங்கள் தடவி லேசாக மசாஜ் செய்யலாம். இவ்வாறு மசாஜ் செய்யும் போது நமது பாதங்கள் எண்ணையை உள்வாங்கி வறட்சி நீங்கி, மென்மையாக மாறிவிடும். 

3. பித்த வெடிப்பு அதிகமாக இருந்தால் வேப்பிலை மற்றும் மஞ்சளை சிறிது நீர் விட்டு மையாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசலாம். 

இவ்வாறு ஒவ்வொரு முறையும் அரைத்து பூச நேரமில்லைனு நீங்க நினைக்கலாம். அவங்க அடுத்த முறையை (4) ட்ரை பண்ணி பாருங்க. 

4. பயித்தம் பருப்பு, காய்ந்த வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் இந்த மூன்று பொருட்களையும் சமஅளவு எடுத்துக்கோங்க. நன்கு காயவைத்து பொடி செய்து காற்று போகாத மாதிரி  டப்பாவில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிது தயிர் மற்றும் சில சொட்டு எலுமிச்சை சாறு கலந்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசலாம். 

5. பொடியாக அரைக்கவும் நேரமில்லை எனில் இந்த முறையை செஞ்சு பாருங்க. தயிரில் சிறிது உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து அந்த கலவையை ஒரு பிரஷ் வைத்து தொட்டு பாதங்களில் தேய்த்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவி பாருங்கள். உங்கள் பாதங்கள் மென்மையாக மெத்தென்று மாறிவிடும். 

6. வெந்தயக்கீரையை எடுத்து சிறிது நீர் சேர்த்து அரைத்து உங்கள் பாதங்களில் தடவி காய்ந்ததும் கழுவி விடலாம். ஆனால் அடிக்கடி சளி பிடிக்கும் நபர்கள் இம்முறையை பகல் நேரத்தில் செய்வது நல்லது. 

7. பப்பாளி பழத்தை எடுத்து அதை அரைச்சு அதோட சிறிது எலுமிச்சை சாறு கலந்து பாதங்களில் தடவும் போது வெடிப்பு மறைவதோடு அதனால் ஏற்பட்ட கருமை நிறமும் மறையும். 

7 Natural Home Remedies To Remove Dry And Cracked Heels

கவனிக்க வேண்டியவை : 

1. அதிக நேரம் சோப்பு தண்ணீரில் நிற்காதீங்க

2. வறட்சி ஏற்படுத்துற சோப்பு பயன்படுத்தாம கிளசரின் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம்

3. கடினமா இருக்குற செருப்புகளை பயன்படுத்தாம மிருதுவான செருப்புகளை பயன்படுத்துங்க. 

4. சுத்தமான காட்டன் சாக்ஸ் பயன்படுத்துங்க. 

5. தினமும் குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு தினமும் லேசாக தேங்காய் எண்ணெய் கால்களில் தடவி விட்டு பின்னர் குளிக்கலாம். 

இந்த முறைகள் தொடர்ந்து செய்யும் போது வறட்சி மட்டும் இல்லங்க.. நாள்பட்ட அதிக வலி தரக்கூடிய பித்த வெடிப்பு கூட குணமாகிடும். அதோட பாதங்கள்ல இருக்குற கருமை மறைஞ்சு, அழகா மிருதுவா தாமரை பூ மாதிரி உங்க பாதங்கள் மின்னவும் ஆரம்பிக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!