ஐயய்யோ பாவம்…!! சிறகடிக்க ஆசை மீனாவிற்கு ஏற்பட்ட விபத்து…!!

“மீனா.. என்னாச்சு உங்களுக்கு..!!பார்த்து கவனமா இருக்க வேணாமா..!!” சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோயின் நடிகை கோமதி பிரியா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களோட எண்ணம் இப்போது இதுவாகதான் இருந்திருக்கும்.

விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் ( Siragadikka Aasai Serial) இப்போது இருந்து கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் இந்தளவு ரீச் ஆவதற்கு முக்கிய காரணம் சீரியலோட ஹீரோ ஹீரோயின் முத்து- மீனா ஜோடி ( Siragadikka Aasai Muthu Meena) தான். சீரியலில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது.

இதுல மீனாவாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சிறப்பான நடிப்பை கொடுத்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா. இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

READ MORE: அட்ரா சக்கை..!! இனிதான் சம்பவமே..!! கதையை மாற்ற போகும் தர்ஷினி வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் கோமதி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோவில் கோமதிக்கு காலில் அடிபட்டு இருக்கிறது. மலையாளத்தில் தான் நடித்து வரும் செம்பன்னீர் பூவு என்ற சீரியலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறு விபத்து ஏற்பட்டு அடிபட்டதாகவும்.. இது தான் சூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு ஏற்பட்ட முதல் விபத்து என்றும் கோமதி பிரியா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த தொடரில் ரேவதி என்ற கேரக்டரில் கோமதி பிரியா நடித்து கொண்டு இருக்கிறார். அதில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது சிறுவிபத்து ஏற்பட்டு அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள், “Get Well Soon” என்று கோமதிக்கு ஆதரவாக வீடியோவிற்கு கீழே தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.