பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களும் சரி, பாடி பில்டிங் செய்ய விரும்பும் மக்களுக்கும் கொடுக்கப்படும் டயட் சார்ட்டில் கட்டாயம் பன்னீர் ( Paneer) இடம் பெற்று இருக்கும். இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பலருக்கும் குறைவாகவே உள்ளது.
அதே போல பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று பலரும் பயப்படுவது உண்டு. ஆனால் முறையாக பன்னீரை நாம் எடுத்துக் கொண்டால் அதை விட உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் உணவு இல்லை எனலாம்.
நாம் தினமும் 100 கிராம் அளவு பன்னீர் எடுத்துக்கொள்ளும் போது நம்மால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல நம் உடலுக்கு தேவையான கால்சியம் ( Calcium) அளவையும் பூர்த்தி செய்கிறது. அதாவது நமக்கு ஒருநாளில் தேவைப்படும் கால்சியம்மில் 25% மற்றும் வைட்டமின் A ல் 22% யும் 100 கிராம் பன்னீர் பூர்த்தி செய்கின்றது. அதாவது 100 கிராம் Panner ல் 245 மில்லிகிராம் Calcium சத்து உள்ளது.
அதே போல 100 கிராம் பன்னீரில் 21 கிராம் கொழுப்பு ( Fat), 18 கிராம் புரோட்டீன் ( Protein), 3 கிராம் கார்போஹைட்ரேட் ( Carbohydrate) உள்ளன. மொத்தம் 100 கிராம் பன்னீரில் 170 கலோரிகள்( Calories) உள்ளன. இதில் கொழுப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் காலை உணவாக எடுத்துக்கொள்ளும் போது நீண்ட நேரம் நமக்கு பசி உணர்வு இருக்காது. காரணம் என்னவெனில் பொதுவாக கொழுப்பு உணவு செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
அதேசமயம் LCHF என அழைக்கப்படும் குறைந்த கார்போஹைடிரேட் அதிக கொழுப்பு Diet ( Low Carb High Fat Diet) யை பின்பற்றும் நபர்கள் பன்னீர் எடுத்துக்கொள்ளும் போது நல்ல பலனைக் கொடுக்கும். அதேபோல நீங்கள் வெஜிடேரியன் ( Vegetarian) ஆக இருக்கும் நபர்கள் எனில் உங்களுக்கு தேவையான புரோட்டீன் அளவை ஈடுகட்ட நீங்கள் கஷ்டப்படுவீர்கள். அத்தகைய நபர்கள் பன்னீர் எடுத்துக்கொள்ளுவது மிகவும் சிறந்தது.
எனவே உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தினமும் பன்னீர் எடுத்துக் கொள்ளுவதோடு முறையாக உடற்பயிற்சி ( Exercise) செய்யும் போது உடல் எடை வேகமாக குறையும். மேலும் பசு மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் பன்னீர் விட எருமைப் பாலில் இருந்து கிடைக்கும் பன்னீரில் அதிக கொழுப்பு இருக்கும். அதேபோல 100 கிராமில் புரோட்டீனின் அளவும் 18 முதல் 19 கிராம் வரை இருக்கும்.
ஆனால் இதனை தவறான முறையில் சமைத்து கிரேவி போன்ற உணவு பதார்த்தங்களில் மற்ற கொழுப்பு உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது தான் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இனி பன்னீரை தினமும் 100 கிராம் அளவு தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.