Top 6 Healthy Foods for Weight Gain Quickly and Naturally

உடல் எடையை குறைச்சு குண்டான உடம்பை ஒல்லியா ( Weight Loss) ஆக்குறது ரொம்ப கஷ்டம்னு தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் மிக ஒல்லியாக இருக்கும் நபர்கள் குண்டாக மாற படும் கஷ்டம் ( Weight Increase)  அவர்களுக்கு மட்டுமே தெரியும். 

“என்ன சாப்பிட்டாலும் குண்டு ஆக மாட்டிக்கிறோமே..!! இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறோமே.!!” என வேதனைப்படும் பல நபர்கள்  இருக்கிறார்கள். அதேசமயம் உடல் எடையை அதிகரித்து குண்டாக மாற எதை வேண்டுமானாலும் சாப்பிடலாமா?? இல்லை. கண்டிப்பாக அப்படி சாப்பிடக்கூடாது. 

சிலர் எப்படியாவது உடல் எடை அதிகரிக்க வேண்டும் என பேக்கரி உணவுகள், சிக்கன், மட்டன், பரோட்டா என்று வெளுத்து கட்டுவார்கள். நீங்கள் நினைப்பது போல உடல் எடை கூட துவங்கினாலும் அது ஆரோக்கியமான உடல் எடையாக இருக்காது. நாளடைவில் சர்க்கரை நோய் (Diabetic), அல்சர் (Ulcer), கொலஸ்ட்ரால் (Cholesterol) போன்ற பல நோய்களை ஏற்படுத்திவிடும். 

எனவே இந்தப் பதிவில் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிப்பது ( Natural Weight Increasing Tips)  எப்படி என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.

1. வாழைப்பழம் ( Banana) 

உடல் எடை அதிகரிப்பில் வாழைப் பழத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் காலை செவ்வாழை எடுத்துக் கொள்ளுவது அல்லது தினமும் இரவு ஒரு பச்சை வாழைப்பழம் அல்லது நேந்திரம் பழம் அல்லது நாட்டுப் பழம் அல்லது உங்கள் ஏரியாவில் என்ன வகை வாழை கிடைக்குமோ அதை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். வாழை பழத்தில் கலோரி அதிகம் உள்ளதுடன் உடலுக்கு தேவையான மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது. கொலஸ்ட்ரால் கிடையாது. அதனால் ஆரோக்கியமாக Weight Increase பண்ண வாழை உதவும்.

2. பால் மற்றும் தேன் ( Milk & Honey) 

பால் உடலுக்கு தேவையான கால்சியத்தை வழங்கக்கூடியது. அதே சமயம் புரோட்டீன் ( Protein) மற்றும் நல்ல கொழுப்பு ( good fat) பாலில் உள்ளது. தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக பாலில் சர்க்கரைக்கு பதிலாக 1 முதல் 1 1/2 ஸ்பூன் தேன் கலந்து குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 1 மாதத்தில் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றத்தை உணருவீர்கள். 

3. எள் ( Sesame seeds) 

கொழுத்தவனுக்கு கொள்ளு. இளைத்தவனுக்கு எள்ளு என்ற பழமொழியை செல்லக் கேட்டு இருப்போம். அதாவது உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் கொள்ளு உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல் உடல் எடையை அதிகரிக்க விரும்பும் நபர்கள் எள்ளு எடுத்துக் கொள்ள வேண்டும். 

எள்ளு பொருத்தவரை வெல்லம் சேர்த்து செய்த எள்ளு உருண்டை, எள்ளு இட்லி பொடி, எள்ளு சாத பொடி, எள்ளினால் செய்யப்பட்ட பலகாரங்கள்  போன்ற ஏதாவது வடிவத்தில் எள்ளினை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் எள்ளு பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் சார்ந்த கோளாறுகளை ( Mensural Issues)  சரி செய்யும். அதே சமயம் எள்ளு அதிக சூட்டை ஏற்படுத்தும் என்பதால் உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்கள் சற்று குறைந்த அளவு உண்ணுங்கள். கர்பமாக இருக்கும் பெண்கள் ( Pregnant Ladies) எள்ளு தவிர்ப்பது நல்லது. 

4. முந்திரி, பாதாம், உலர் திராட்சை ( Dry Fruits and Nuts) 

மாலை நேர நொறுக்கு தீனிகளை குறைத்து விட்டு இதுபோன்ற பருப்புகளை உண்ணும் போது உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிக்கும். இதனுடன் பேரீச்சம் பழம் சேர்த்து உண்ணும் போது கூடுதல் பலன் கிடைக்கும் 

5. பீன்ஸ், உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ( vegetables )

இந்த 3 காய்கறிகளில் ஏதாவது ஒன்றினை மாறி மாறி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகளில் கிடைக்கக் கூடிய எனர்ஜி இந்த காய்கறிகளில் உங்களுக்கு கிடைக்கும். 

6. தேங்காய் பால் மற்றும் மாதுளை ( Coconut Milk and Pomegranate ) 

சிலருக்கு அல்சர் ( Ulcers) போன்ற பிரச்னைகள் இருந்தாலோ சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் தொந்தரவு இருந்தாலும் உடல் மெலிந்து கொண்டே போகும். அத்தகைய பிரச்சனை இருக்கும் நபர்கள் வாரம் 2 முறை Coconut Milk சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காயில் நல்ல கொழுப்பு உள்ளதே தவிர கொலஸ்ட்ரால் சுத்தமாக கிடையாது. அதேபோல மாதுளம்பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது வயிறு புண்களை ஆற்றி மலம் அடிக்கடி வெளியேறுவதை கட்டுப்படுத்தி உடல் எடை அதிகரிப்பில் உதவுகிறது.  

மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுங்கள். நிச்சயமாக உங்கள் உடல் எடை உயரும் அதிசயத்தைக் காண்பீர்கள். அதே போல உங்கள் உடல் எடை ஆரோக்கியமாக அதிகரித்து உங்கள் அழகும் உயரும். ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாது சிறு குழந்தைகள் உடல் தேராமல் இருந்தாலும் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சமைத்துக் கொடுக்கலாம். கண்டிப்பா ட்ரை பண்ணிப் பாருங்க..!!