உடல் எடை குறையவில்லையா?
How to Use Garlic for Weight Loss
இக்காலத்தில் பெரும்பாலான மக்களின் மிகப்பெரிய பிரச்சனை அதிகமான உடல் எடை. “நான் எல்லா டயட்டும் ட்ரை பண்ணி பாத்துட்டேன், ஆனா உடம்பு மட்டும் குறையவே மாட்டிக்கிது..” – இது மாதிரி புலம்புகிறவர்களும் உண்டு. சிலருக்கு உடற்பயிற்சிகள் செய்தும் உடல் எடையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. இவ்வாறு உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்களுக்கு பூண்டு அருமருந்தாக செயல்படுகிறது. “அடபோங்க…பூண்டு எப்படி வெயிட்லாம் குறைக்கும்” னு நினைச்சிடாதீங்க.. சரியான விதத்துல சரியான அளவு எடுக்கும் போது உங்க உடல் எடை குறைப்பில் பூண்டு ஒரு பெரிய மேஜிக்கே பண்ணிடும்.
இவ்வளவு நன்மைகளா?
இந்தப் பதிவை படித்து முடிக்கும் போது “சின்ன பூண்டுல எவ்ளோ நன்மைகளா?” என்று நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள்”. மேலும் நமது இந்திய பாரம்பரிய சமையல் உணவுகளில் பூண்டுக்கு சிறப்பான இடம் இருக்கும். பூண்டு சேர்த்தே பெரும்பாலான உணவுகள் சமைக்கப்படுகின்றன.
பூண்டின் பயன்கள்
1. நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
2. இரத்த நாளங்களின் இறுக்கத்தை தளர்த்துகிறது. இதனால் இரத்த ஓட்டம் தமனிகள் வழியாக உடல் முழுவதும் சீராக பாய உதவுகிறது.
3. இதய நோய் வராமல் காக்கிறது.
4. உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து பூண்டானது போராடுகிறது. எனவே தான் எடையை குறுகிய காலத்தில் குறைக்க எண்ணுபவர்களுக்கு
சிறந்ததாக விளங்குகிறது.
5. நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி6, வைட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளன.
6. மாங்கனீசு, கால்சியம் போன்ற பல ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளதால் உடம்பில் உள்ள அதிகப்படியான
கொழுப்பை கரைக்க உதவுகிறது.
சக்தி வாய்ந்த பூண்டு டானிக்
இவ்வளவு சிறப்பு குணங்களை உடைய பூண்டை எவ்வாறு உண்ணுவது என்பதை தற்போது காணலாம். பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், எலுமிச்சையுடன் தேன் கலந்து குடிப்பது, வெதுவெதுப்பான நீரை பருகுவது போன்ற பல எடைக்குறைப்பு
ஐடியாக்களை பின்பற்றுவார்கள். இவ்வளவு முறைகள் இருந்தாலும் தேனுடன் பூண்டு சேர்த்து உருவாகும் கலவை சக்தி வாய்ந்த எடை குறைப்பு மருந்தாக மாறிவிடுகிறது.
டானிக் எப்படி செய்வது?
பூண்டு மற்றும் தேன் அடங்கிய சக்தி வாய்ந்த எடை குறைப்பு டானிக்கை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். 1. முதலில் ஒரு சுத்தமான கண்ணாடி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அந்த ஜாரில் பாதியளவு தேனை நிரப்பிக் கொள்ளுங்கள்.
3. பின்பு சிறிது பூண்டை எடுத்துக் கொண்டு தோலுரித்து முழு பூண்டு பற்களையும் தேன் உள்ள ஜாரில் போடுங்கள்.
4. பூண்டு தேனில் முழுமையாக மூழ்கும் படி இருக்க வேண்டும்.
5. இப்படியே சில நாட்களுக்கு (5 முதல் 8 நாட்கள்) தேனிலேயே பூண்டு ஊற வேண்டும்.
6. பூண்டானது தேனில் ஊறி அதன் அனைத்து சத்துக்களும் தேனில் இறங்கி விடும். அவ்வளவுதான்..பூண்டு தேன் எடைகுறைப்பு டானிக் ரெடி.
எப்பொழுது சாப்பிட வேண்டும்?
காலையில் எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில் இந்த டானிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். தேனில் நன்கு ஊறிய பூண்டில் இருந்து ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை எடுத்து அதை நன்கு நசுக்கி சிறிது தேனுடன் சாப்பிடுங்கள். பூண்டின் காரமானது தேனில் ஊறியதால் குறைந்திருக்கும். மேலும் சிறிது தேனுடன் உண்ணும்போது சுவையும் நன்றாக இருக்கும். எனினும் பூண்டின் சுவை திகட்டினால் டானிக் எடுத்துக்கொண்ட 10 நிமிடம் கழித்து சிறிது வெதுவெதுப்பான நீரை குடித்துக் கொள்ளலாம். இதை தினமும் செய்துவர ஒரு மாதத்தில் உங்கள் உடல் எடையில் வித்தியாசத்தைக் கண்கூடாக காண்பீர்கள்.
பூண்டு,தேன் டானிக்கின் நன்மைகள்
1. பூண்டை நாம் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது உடலின் செரிமானத்தை அதிகரிக்கிறது.
2. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமாக நம்மை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
3. உடலின் கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் உடல் எடை
சீராக இருக்க உதவுகிறது.
4. ஜலதோஷம், காய்ச்சல், குளிர் போன்றவற்றில் இருந்து விடுபட பெரிதும் உதவுகிறது.
5. மேலும் தேன் அதிகளவு பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகமாக உணவு உண்ணுதல் தடுக்கப்படுகிறது.
6. தேனானது கொழுப்பு நிறைந்த பொருளாக இல்லாவிட்டாலும் நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட உதவுகிறது.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
ஆஸ்துமாவினால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த டானிக் எடுத்துக் கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரை அணுகுவது நலம். ஏனென்றால் ஆஸ்துமா இருக்கும் நபர்களுக்கு பூண்டு சிறந்தது கிடையாது. அதேபோல் அறுவை சிகிச்சைக்கு தயாராகும் நபர்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவைசிகிச்சை செய்த பிறகும் இந்த பூண்டு தேன் டானிக்கை தவிர்க்க வேண்டும். உடல் எடையை குறைக்கும் என்பதற்காக அதிக அளவிலும் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதிக எடை இருந்தால் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 2 முதல் 3 தேனில் ஊறிய பூண்டு பற்கள் போதுமானது.