பொதுவா பார்லர் பக்கமே போகாத பெண்கள் கூட கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சுனா பார்லர் பக்கம் தலை காட்ட ஆரம்பிச்சிடுவாங்க. ஒரு சிலரோ கல்யாணத்துக்கு 4 நாட்களுக்கு முன்னாடி போய் ப்ளீச் பேஷியல், வாக்சிங்னு என்னவோலாம் பண்ணுவாங்க. சிலருக்கு இது ஒர்க் அவுட் ஆகும். ஆனா பெரும்பாலான பெண்களுக்கு எப்படி தீடீர்னு முகத்துல எல்லாம் பண்ணுறதால பருக்கள் வர ஆரம்பிக்கும். கல்யாணத்துக்கு அழகா இருக்க ஆசைப்பட்டு கடைசில முகத்துல பரு வந்தது தான் மிச்சமா இருக்கும்.
இன்னைக்கு பதிவுல பார்லர்ல பண்ணுற Facial வீட்டுலயே செலவே இல்லாம ஈஸியா நாம எப்படி பண்ணுறதுனு தான் பார்க்கப் போறோம். இந்த பேஷியல் பார்லர்ல Golden Facial பண்ணுன பலன் உங்களுக்கு கொடுக்கும்.
முதல்ல முகத்துக்கு எந்த ஒரு விஷயம் பண்ணுறதுக்கு முன்னாடி நம்ம சருமத்தில இருக்குற இறந்த செல்களை ( Dead Cells) நிக்கணும். இப்படி Dead Cell நீக்குறதை தான் கிளன்ஸிங்னு (Cleansing) சொல்லுவாங்க. உதாரணத்துக்கு சொல்லணும்னா நாம பயன்படுத்துற Soap, Facewash கூட ஒரு Clenser தான்.
இப்போ இயற்கையா முகத்தை எப்படி Cleansing பண்ணுறது பார்ப்போம்.
Cleansing பண்ண தேவையான பொருட்கள்
1. காய்ச்சாத பசும்பால் – 2 ஸ்பூன்
2. அரிசி மாவு – 1 ஸ்பூன்
3. வாழைப்பழ தோல்
ஒரு கிண்ணத்துல பசும்பால் ஓட அரிசி மாவு சேர்த்து இதை நல்லா Mix பண்ணி பேஸ்ட் மாதிரி ஆக்கிக்கோங்க. முகத்தை சுத்தமான தண்ணி வச்சு கழுவிட்டு இந்த கலவையை வாழைப்பழ தோல் வச்சு எடுத்து அப்படியே தோலால முகத்துல தடவி நல்லா வாழைப்பழ தோல் வச்சு முகத்துல 3 நிமிடங்கள் நல்லா மசாஜ் பண்ணுங்க. மறக்காம கழுத்து, காது பின்புறம்னு எல்லா இடங்களிலேயும் மசாஜ் பண்ணுங்க. அதுக்கப்புறம் சுத்தமான தண்ணீர் வச்சு முகத்தை கழுவிடுங்க. இது பண்ணதும் உங்க முகத்துல இருந்த அழுக்கு, இறந்த செல்கள் எல்லாமே வெளியேறிடும்.
பொதுவா Skin Care எடுத்துகிட்டோம் னா Cleansing, Scrub, face mask, Face Pack, Moisturizerனு நிறைய இருக்கும். அது எல்லாமே வீட்டுல நாமளே எப்படி செய்யுறதுன்னு இனி வரப்போற பதிவுகள்ல ஒன்னு ஒன்னா பார்ப்போம். இப்போ எளிமையா ஒரு Cleansing, Facial மட்டும் பார்ப்போம்.
இங்க Facial ஓட Cleansing சேர்த்து குறிப்பிட்டதுக்கு காரணம் என்னன்னா, முகத்துல இருக்குற அழுக்கை நீக்காம நாம என்ன Facial பண்ணாலும் அவ்ளோ பளிச்சுன்னு இருக்காது. அதுக்காக தான் இந்த 2 முறைகளை மட்டும் சொல்லிருக்கேன். வாங்க Magic Marriage Facial எப்படி பண்ணுறதுனு பார்ப்போம்.
1. பப்பாளி பழம் – 8 சிறிய துண்டுகள்
2. தேன் – 1 ஸ்பூன்
3. கெட்டி தயிர் – 1 ஸ்பூன்
பப்பாளி பழத்தை அரைச்சு நல்லா கூழ் மாதிரி ஆக்கிக்கோங்க. அரைச்ச பப்பாளி கூழ்ல இருந்து 3 ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்துல போட்டுக்கோங்க. அதோட 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து நல்லா Mix பண்ணிக்கோங்க. இந்த கலவையை முகம் கழுத்துனு முழுவதும் Apply பண்ணுங்க. அப்படியே 20-30 நிமிடங்கள் காய விட்டுடுங்க. அதுக்கப்புறம் சுத்தமான குளிர்ந்த தண்ணீர் வச்சு கழுவிடுங்க. உங்க முகம் தங்கம் மாதிரி மின்னும்.
இந்த Facial எப்போ பண்ணுறதுனு பார்க்கலாம்.
கல்யாணம், நிச்சயம் அல்லது வேறு ஏதோ முக்கியமான நிகழ்ச்சில நாம ரொம்ப அழகா இருக்கணும்னா அதுக்கு 1 வாரம் முன்னாடி இருந்து தினமும் இதை பண்ண ஆரம்பிக்கலாம்.
என்னடா பார்லர் போனா 1 நாள் பண்ணுனா போதும். இது 7 நாட்கள் தொடர்ந்து பண்ணனுமானு நீங்க யோசிக்கிறது புரியுது. இதற்கான காரணத்தை இப்போ பார்ப்போம்.
One Week Magic Facial பலன்கள்
1. உங்க முகத்துல இருக்குற Pigmentation சரியாகும் ( அதாவது உங்க முகத்துல அங்க அங்க கருப்பா இருக்கும். Skin Tone ஒரே மாதிரி இருக்காது)
2. பருக்கள் ( pimples), மங்கு, கரும்புள்ளிகளை ( Dark Spots) குறைக்கும்.
3. முகசுருக்கம் ( Wrinkles), சூரிய ஒளியினால் ஏற்பட கூடிய கருமையை ( Sun Tan) நீக்கும்
4. உங்கள் கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை ( Dark Circle) நீக்கும்.
5. முகம், கழுத்து பகுதிகளுக்கு நல்ல பொலிவை தரும்.
இவ்ளோ பலன்களை இந்த facial முழுமையா தர நாம 1 வாரம் தொடர்ந்து செய்து தான் ஆகணும். ஒரு நாள்ல இந்த எல்லா பிரச்சனைகளும் நமக்கு சரி ஆக வாய்ப்பு இல்லை. தொடர்ந்து செய்து பாருங்க. மேக்கப் போட்டா தான் அழகு ன்ற நிலை மாறி, இயற்கையாகவே உங்க முகம் அழகா இருக்கும்.
கல்யாண பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல, நம்ம குடும்பத்துல ஏதாவது Function, பார்ட்டினு நாம எங்க போகுறதுக்கு முன்னாடியும் இதை பண்ணி பாருங்க. அந்த நிகழ்ச்சியில நீங்க தான் ராணி மாதிரி ஜொலிப்பீங்க.. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..