உடல் எடை(Body Weight).. இந்த காலத்துல இது ஒரு பெரிய பிரச்சனையா தாங்க இருக்கு.. ஒருபக்கம் அதிக உடல் எடையை எப்படியாவது குறைக்கணும்னு (How to lose Weight ) மக்கள் படாத பாடுபடுறாங்க.. இன்னொரு பக்கம், “என்ன பண்ணாலும் வெயிட் ஏறவே (How to gain weight) மாட்டேங்குதே..!! இப்படி ஒல்லி குச்சியா எவ்ளோ நாள் தான் இருக்குறது..!!” னு மக்கள் ஆதங்கபட்டுகிட்டும் இருக்காங்க.
வாக்கிங், ஜிம், டயட் னு உடல் எடையை குறைக்க (Best Weight loss Methods) முயற்சி செய்யுற பெரும்பாலான மக்களுக்கு ரிசல்ட் பாசிட்டிவ் ஆஹ் கிடைச்சிடுது.. ஆனா உடல் எடையை அதிகரிக்க (Weight Gain) தான் சரியான வழி தெரியாம பலரும் திண்டாடுறாங்க..
உடல் எடையை அதிகரிக்க முதல் (Weight Gain Food) விஷயம் உணவு தாங்க.. அதுக்குன்னு கேக், சாக்லேட், பரோட்டா, பாஸ்ட் புட் னு கிடைக்கிற எல்லாத்தையும் சாப்பிட கூடாது.. இதெல்லாம் சாப்பிட்டா எடை கூடும்.. ஆனா அது ஆரோக்கியமான உடல் எடையா இருக்காது.. இதுமாதிரி உணவுகளை அளவுக்கு அதிகமா எடுக்கும் போது அதுவே அதிக கொழுப்பாக மாறி வேறு உடல்நல பிரச்சனையை கொண்டு வந்துடும்..
அதுனால ஆரோக்கியமான அதே சமயம் சுவையான சத்தான உணவை சாப்பிட்டே அசால்ட்டா உடல் எடையை ( Healthy Weight Gain Foods) கூட்ட முடியும்.. அப்படி இன்னைக்கு நாம பார்க்க போற உணவு தான் வாழைப்பழ மில்க் ஷேக் (Weight Gain Banana Milk Shake).
ஆமாங்க.. உங்க உடல் எடையை ஈஸியா ஹெல்தியா அதிகரிக்க வாழைப்பழ மில்க் ஷேக் ( Banana Milk Shake) ரொம்பவே உதவியா இருக்கும்.. இந்த வாழைப்பழ மில்க் ஷேக்கை எப்படி பண்ணனும் (How to Make Weight Gain Banana Milkshake), எப்போ சாப்பிட்டா உடல் எடை அதிகரிக்கும்னு ( Best Time to Drink Banana Milk Shake for Weight Gain) இப்போ பார்க்கலாம்.
வாழைப்பழ மில்க் ஷேக் தயாரிக்கும் முறை (How to make Banana Milk Shake)
தேவையான பொருட்கள்
* பழுத்த வாழைப்பழம் ( Banana) – 2
* ஊறவைத்த பேரீச்சம்பழம் ( Soaked Dates) – 3 முதல் 4
* குளிர்ந்த பால் ( Milk) – 300 மிலி
* வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ( Vennila Essence) ( தேவையெனில்)
* சர்க்கரை ( Sugar) ( தேவையெனில்)
* ஏலக்காய் தூள் ( Cardamom Powder) – சிறிது
* பொடித்த பாதாம், முந்திரி ( Badam & Cashews) – சிறிது
வாழைப்பழ மில்க் ஷேக் செய்யும் போது நன்கு பழுத்த வாழைப்பழங்கள் தான் அதிக சுவை தரும்.. மஞ்சள், பச்சை, செவ்வாழை என உங்களுக்கு விருப்பமான எந்த வாழைப்பழ ரகமாக இருந்தாலும் ஓ.கே தான்.. வாழை சிறிது காயாக இருந்தால் ஒருவித துவர்ப்பு சுவையை தந்துவிடும்.. எனவே நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து கொள்ளுங்கள்.. அதன் தோலினை நீக்கி துண்டு துண்டாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்..
சிறிது தண்ணீரில் பேரீச்சம் பழத்தை போட்டு சுமார் அரைமணி நேரம் ஊறவைத்து, ஊறவைத்த நீருடனே ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.
சுவையை மேலும் அதிகரிக்க வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.. உங்கள் விருப்பம் தான்.. இல்லையெனில் விட்டு விடவும்..
ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்..
கனிந்த வாழைப்பழமும் இனிப்பு சுவையை தரும். பேரீச்சம்பழமும் நன்கு இனிப்பு சுவையை தரும்.. எனவே சர்க்கரை தேவைப்பட்டால் மட்டும் சேர்க்கவும்..
பின் நன்கு குளிர்ந்த பாலை ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்..
குளிர்ந்த பாலுடன் வாழைப்பழம் நன்கு மசிந்து மில்க் ஷேக் பதத்திற்கு வந்ததும் மிக்சியை அணைத்து விடவும்..
இதனை ஒரு டம்ளரில் ஊற்றி மேலே உடைத்த பாதாம் முந்திரியை தூவி ஜில்லென குடிக்க வேண்டியது தான்.
குறிப்பு :
* மில்க் ஷேக் மிகவும் கட்டியாக இருப்பது போல தோன்றினால் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.. அதே போல பாலின் அளவை அதிகரித்து பழத்தின் அளவை கூட உங்கள் வசதிக்கு ஏற்ப குறைத்து கொள்ளலாம்..
* உடைத்த பாதாம் முந்திரியை இறுதியில் சேர்க்காமல், பேரீச்சம் பழத்துடன் ஊற வைத்து வாழைப்பழத்துடன் சேர்த்து அரைத்தும் குடிக்கலாம்.. சுவை அற்புதமாக இருக்கும்..
* மில்க் ஷேக் இன்னும் குளிர்ச்சியாக வேண்டுமென்றால் ஒரு அரைமணி நேரம் பிரிட்ஜில் ( Fridge)வைத்து விட்டு குடிக்கலாம்.. அல்லது 2 ஐஸ் கட்டிகளை மில்க் ஷேக்கில் சேர்த்து குடிக்கலாம்..
* சிலர் இதில் ஐஸ்கிரீம் சேர்த்து செய்வதும் உண்டு.. சிலரோ அரைக்கும் போதே இதனுடன் ஒரு ஸ்பூன் சாக்லேட் பவுடர் சேர்த்து சாக்லேட் பிளேவரில் தயார் செய்வதும் உண்டு..
ஆனால் இப்படி தயார் செய்வது அனைவருக்கும் சாத்தியம் கிடையாது. எனவே தான் மிக எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே குறைந்த செலவில் அதே சமயம் ஆரோக்கியமான வாழைப்பழ மில்க் ஷேக் தயாரிக்கும் முறையை ( Easy Homemade Weight Gain Banana Milkshake) இங்கு கொடுத்துள்ளோம்.
எப்பொழுது குடிக்கலாம் ? ( Best Time to Drink Banana Milkshake for Weight Gain)
வாழைப்பழ மில்க் ஷேக்கில் கலோரி ( High Calories) அதிகம்.. எனவே காலையில் இதனை குடிப்பது சிறந்தது.. காலை உணவாக இதனை எடுத்து கொள்ளலாம்.. அல்லது காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே வெயிலுக்கு இதமாக ஜில்லென குடிக்கலாம்.. அல்லது உடற்பயிற்சி செய்த பின் ( Post Workout Meal) உடனடி ஆற்றல் கொடுக்கும் வாழைப்பழ மில்க் ஷேக்கை குடிக்கலாம்..
இதன் சுவை பிடித்தவர்கள் தினமும் அருந்தலாம்.. அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளாவது குடிப்பது சிறந்த பலன் அளிக்கும். அதேபோல இந்த வாழைப்பழ மில்க் ஷேக் மட்டும் குடித்து நீங்கள் விரும்பிய உடல் எடையை அடைய முடியாது.. இதனுடன் சேர்த்து முறையான உடற்பயிற்சி, உணவு முறையில் சில மாற்றங்களை செய்வதே உங்கள் லட்சிய உடல் எடையை அடைய உதவும்.