Hot Water Bath is Good or Bad..?? Detailed Report

அக்காலத்தில் நாம் அனைவருமே ஆறு, குளம், அருவி போன்றவற்றில் மணிக்கணக்காக குளித்தோம். ஆனால் இக்காலத்தில் நிம்மதியான வீட்டுக் குளியலே பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. அவசர அவசரமாக ஷவரிலோ, குழாயை திறந்தோ கடனே என குளித்துவிட்டு செல்பவர்களே அதிகம். 

இந்நிலையில் இக்காலத்தில் வெந்நீரில் (Hot Water Bath) குளிப்பதற்கு பலரும் அடிமை ஆகிவிட்டார்கள் என்றே கூறலாம். பொதுவாக வெந்நீரில் குளிப்பதில் (Benefits of Hot Bath) சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன. வெந்நீரில் நாம் குளிக்கும் போது 30 நிமிடங்கள் நாம் வாக்கிங் செல்லும் போது எவ்வளவு கலோரி எரியுமோ அந்த அளவு கலோரி எரிய துவங்கி உடல் எடை குறைப்பிற்கு உதவும். 

அதேபோல் நாம் மன அழுத்தத்திலோ , அதிக கோவத்திலோ இருக்கும் போது வெந்நீரில் குளிப்பது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கி மன அமைதியை (Stress Relief) அளிக்கிறது. அதேபோல நமக்கு உடல்நிலை சரி இல்லாத சமயங்களிலோ அல்லது ஜலதோஷம் பிடித்து இருக்கும் சமயங்களிலோ வெந்நீரில் சிறிது யூகாலிப்டஸ் சேர்த்து குளிப்பது நல்ல தீர்வை கொடுக்கும். 

Hot Water Bath is Good or Bad..?? Detailed Report

அதே போல் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது ( Oil Bath) மிதமான சுடுநீரில் குளிப்பது நன்மை தரும். அதேசமயம் வெந்நீர் உடலுக்கு தரும் நன்மைகளை விட தீமைகளே அதிகம். 

நாம் உடலுக்கு சுறுசுறுப்பு கொடுக்கும் என நினைக்கும் வெந்நீர் குளித்தவுடன் சுறுசுறுப்பாக இருந்தாலும் சிறிது நேரத்திலேயே தூக்க உணர்வை உண்டாக்கி விடும். நாளின் துவக்கத்திலேயே ஏற்படும் சோர்வு அந்த நாளின் புத்துணர்வையே கெடுத்து விடும்.

அதேபோல் தினமும் வெந்நீரில் குளிப்பது நமது சருமத்தின் ஈரப்பதத்தை ( Skin Dryness) உறிஞ்சி வறட்சி ஆக்கிவிடும். அதேபோல அதிக சூடான நீரை தலையில் விடும் போது வேர்க்கால்களின் உறுதியை குறைத்து முடி உதிர்வுக்கு ( Hair Fall) வழி வகுக்கும். 

மேலும் உடலில் அரிப்பு ( Skin Itching) மற்றும் தலையில் பொடுகு தொல்லை ( Dandruff) இருப்பவர்கள் கண்டிப்பாக வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து விட வேண்டும். அதுவும் குறிப்பாக பெண்களை விட வெந்நீர் குளியல் ஆண்களுக்கே அதிக பாதிப்புகளை உண்டாக்குகிறது. 

அரைமணி நேர பாத்டப் வெந்நீர் குளியல் ஆண்களின் உயிரணுக்களை பாதிக்கும் அளவு ஆபத்தானது. இவ்வாறு தொடர்ந்து குளிக்கும் போது ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும். 5 நிமிடங்களுக்கு அதிகமாக வெந்நீரில் குளிக்கக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.  

எனினும் வெந்நீரில் குளித்தே ஆக வேண்டும்.. வெந்நீர் பழகிவிட்டது என்று நீங்கள் கூறுபவர்களாக இருந்தால், மிதமான சூட்டில் குளியுங்கள். அல்லது வெந்நீரை நமது அறைவெப்ப நிலைக்கு கொண்டு வந்து குளிக்கலாம். எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.