Side Effects of Period Delay Tablets
இவ்வாறு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது அடுத்த மாதம் வருகிற மாதவிடாய் மிகுந்த வலியுடையதாக இருக்கும். சிலருக்கோ மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ( Irregular Periods) என ஆரம்பித்து கர்ப்பப்பை கட்டி ( PCOD), குழந்தை பிறப்பில் பிரச்சனை ( Infertility) வரை கொண்டு சென்றுவிடும். எனவே மாதவிடாயை தள்ளிப்போக செய்ய மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.
அதற்குப் பதிலாக இயற்கை மற்றும் ஆயுர்வேதம் நமக்கு அளித்துள்ள சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றுங்கள். இந்தப் பதிவில் எவ்வித பக்க விளைவும் இல்லாமல் இயற்கையாக, குறைந்த செலவில் மாதவிடாயை தள்ளிப்போகச் செய்யும்
(Natural Homemade Remedies to delay your Menstruation) வழிகளைப் பார்க்கலாம்.
1. வெந்தயம் (Fenugreek)
பொதுவாக அதிகப்படியான உடல்சூடு மாதவிடாயை விரைவில் வரச் செய்யும். எனவே உடல் சூட்டை குறைக்கும் போது அன்றைய தினம் மாதவிடாயை தள்ளிப்போட முடியும். உங்களுக்கு என்று மாதவிடாய் வருவதற்கான நாளோ, அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே சிறிது வெந்தயத்தை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள். தண்ணீர் அல்லது மோரில் முதல் நாள் இரவே ஊறவைத்து அதனை காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் மாதவிடாயை அந்த நாள் தள்ளிப்போட முடியும்.
2. தயிர் ( Curd)
அதிக கார உணவுகளை தவிர்த்து விட்டு தயிர் மோர் போன்ற உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுவதும் பயன் கொடுக்கும்.
3. பொரிகடலை (Roasted Gram)
இந்த வைத்தியம் பாட்டி மற்றும் அம்மா அந்தக் காலத்தில் இருந்தே மாதவிடாய் தள்ளிப்போக பயன்படுத்தியதாக கூறிவது உண்டு. நமது அடுப்படியில் எப்போதும் இருக்கக்கூடிய பொரிகடலை தான் அந்த அருமருந்து. சிலர் இதனை பொட்டுக்கடலை என்றும் கூறுவார்கள்.
இந்த பொரிகடலையை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கை அளவு எடுத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட வேண்டும். காலை காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் பொரிகடலை வைத்தியம் செய்துகொண்ட 2 மணி நேரத்திற்குப் பிறகே குடிக்க வேண்டும்.
இந்த முறையை செய்யும் போது அன்றைய தினம் நிச்சயம் மாதவிடாய் வராது. இவ்வாறு எவ்வளவு நாட்கள் தள்ளிப்போக வேண்டுமோ அவ்வளவு நாட்கள் தினமும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து தள்ளிப்போட இம்முறையை செய்யலாமா என்ற பயமே வேண்டாம். தாராளமாக செய்யலாம். இம்முறையை நிறுத்திய அன்றைய தினமோ அல்லது அடுத்த 2 நாட்களுக்குள் மாதவிடாய் கண்டிப்பாக வந்துவிடும். எவ்வித பக்கவிளைவும் நிச்சயம் ஏற்படாது.
4. சாதம் வடித்த கஞ்சி & சப்ஜா விதைகள் ( Sabja Seeds)
சாதம் வடித்த கஞ்சியுடன் மோர் சேர்த்து அதனுடன் சிறிது சப்ஜா விதைகளையும் சேர்த்து ஊறவைத்து குடியுங்கள். உடலுக்கு நன்கு குளிர்ச்சி தரக்கூடிய இம்முறையினால் அன்றைய தினம் மாதவிடாய் வராது
செய்யக்கூடாதவை
1. அன்றைய தினம் வாக்கிங், உடற்பயிற்சி செய்வதை தவிருங்கள்
2. அசைவ உணவு மற்றும் அதிக காரம் கொண்ட உணவுகளை உண்ணாதீர்கள்
3. அதிக இனிப்புகள் வேண்டாம்
4. எள்ளு, அன்னாசி பழம், பப்பாளி போன்ற உடலுக்கு சூடு ஏற்படுத்தும் உணவு மற்றும் பழங்களை தவிர்த்து விடுங்கள்
5. அதிக உடல் உழைப்பு இருக்கும் வேலைகள், வீட்டு வேலைகளை குறைத்துச் செய்யுங்கள்
6. அனாவசிய பயணங்களை முடிந்தவரை தவிருங்கள்.
7. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல்சூட்டை கிளப்பி மாதவிடாயை வர செய்து விடும். எனவே இதுபோன்ற தினங்களில் எண்ணெய்க் குளியல் வேண்டாம்.
இம்முறைகள் நிச்சயம் பலன் தரும். இதனை சரியாக பின்பற்றினால், முக்கியமான நாட்களில் உங்களுக்கு மாதவிடாய் வந்துவிடுமோ என்ற பயமே தேவையில்லை. சந்தோஷமாக எவ்வித கவலையுமின்றி விழா மற்றும் பண்டிகையை ஜாலியாக கொண்டாடலாம்.