பெரும்பாலான பெண்கள் தங்களை அழகாக வைத்துக் கொள்வதிலும், தங்கள் உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதிலும் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிலும் குறிப்பாக மார்பகங்கள் ( Brest Size) எடுப்பாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்பதே அநேக பெண்களின் கனவாக இருக்கும்.
ஆனால் பல பெண்களுக்கு இது கனவாகவே போய் விடுகிறது. தளர்வான தொங்கும் மார்பகங்கள் (sagging breasts) , மார்பக சுருக்கங்கள் (breast involution) என பல பிரச்சனைகள் ஏற்பட்டு எவ்வளவு முயன்றும் மார்பகங்களை எடுப்பாக மாற்ற முடியாமல் திணறும் பெண்களே அதிகம். ஒருகட்டத்திற்கு மேல் பெண்கள் மார்பகங்களை அழகாக மாற்ற அறுவை சிகிச்சை( breast enhancement surgery) வரை செய்து கொள்கிறார்கள். ஆனால் அந்த அறுவை சிகிச்சை பல பக்க விளைவுகளை உண்டாக்கவே செய்யும்.
இந்தப் பதிவில் இயற்கையாக எவ்வித பக்க விளைவும் இல்லாமல் எவ்வாறு மார்பகங்களை எடுப்பாக அழகாக வைத்துக்கொள்வதுnatural remedies to tighten your sagging breastsஎன்பதை தற்போது பார்க்கலாம்.
பொதுவாக பெண்களுக்கு 18 வயது பூர்த்தி அடையும் போதே மார்பக வளர்ச்சி பெரும்பாலும் நிறைவடைந்து விடும். அதற்கு பின்னர் ஓரளவு மட்டுமே நம்மால் அதன் அமைப்பை மாற்ற முடியும். எனவே பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடனேயே அவர்களுடைய அம்மாக்கள் மார்பக பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் பின்னாளில் அதன் அமைப்பை மாற்ற முடியாது.
ஆனால் நாங்கள் 18 வயதை கடந்த பெண்கள் அல்லது குழந்தை பெற்ற பெண்கள்.. நாங்கள் என்ன செய்வது என்று நீங்கள் வருந்துவது புரிகிறது.. உங்கள் மார்பக பிரச்சனையையும் தீர்க்க சில வழிமுறைகளை இங்கு பகிர்ந்து உள்ளேன்.
1. தினமும் குளிக்கச் செல்லும் முன்பு ஆலிவ் எண்ணெயை எடுத்து மார்பகங்கள் மீது தடவி கீழிருந்து மேலாகவும், வட்ட வடிவிலும் மார்பகம் மற்றும் மார்பகங்களை சுற்றி 10 நிமிடங்கள் மசாஜ் (Breast Massage) செய்ய வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்யும் போதே உங்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றத்தை உங்களால் காண முடியும்.
2. வெந்தயத்தை நன்கு காயவைத்து பொடியாக திரித்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிது பசும்பால் சேர்த்து கலந்து இந்த கலவையை மார்பகங்களில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவி விட வேண்டும். வாரம் 3 முறை இந்த முறையை நாம் செய்யும் போது, தாய்ப்பால் கொடுத்து தளர்வடைந்த மார்பகங்களாக இருந்தாலும் சரி உடல் எடை குறைப்பின் போது தளர்வடைந்த மார்பகங்களாக இருந்தாலும் சரி (breast Sagging due to weight loss) விரைவாக அதன் வடிவம் மாறுவதை காண முடியும். அதோடு மார்பகம் மென்மையாகவும் வனப்புடனும் இருக்கும்.
3. ஐஸ் கட்டிகளைக் கொண்டு அவ்வப்போது ஒத்தடம் கொடுங்கள். இது மார்பக பகுதிகளின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து சுருக்கங்களை போக்க உதவுகிறது.
4. தூங்கும் போது குப்புறப்படுத்து தூங்காதீர்கள். மார்பகங்களுக்கு அதிக அழுத்தம் கிடைப்பது அதனை தொய்வடைய வைத்து விடும்.
5. சரியான அளவில் உங்கள் பிரா (Bra Size) சைஸ் தேர்வு செய்து அணியுங்கள்.
6. மார்பகங்களுக்கு என புஷ்அப், கைகளை சுற்றுதல், கைகளை சுருக்கி விரித்தல் போன்ற பல உடற்பயிற்சிகளும்( Breast Exercises), புஜங்காசனம் போன்ற ( Yoga for breast Enhancement) யோகாசனங்களும் உள்ளன. இதுபோன்ற உடற்பயிற்சிகளை செய்யும் போது மார்பகங்களுக்கு நல்ல வடிவம் கிடைக்கும்.
7. இரவு நேரங்களில் இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள். இது மார்பகங்களின் இறந்த செல்கள் நீங்க தடையாக அமைந்துவிடும். மேலும் இரவு உறங்க செல்லும்போது மென்மையாக 5 நிமிட மார்பக மசாஜ் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
8. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அதுவும் குறிப்பாக புரோட்டீன், ஒமேகா 3 போன்ற நல்ல கொழுப்பு கொண்ட உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாடம் எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
இந்த வழிமுறைகளை தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயமாக தளர்வாக தொங்கும் உங்கள் மார்பங்கள் அதன் வடிவத்தை பெறுவதோடு அழகுடனும் வனப்புடனும் நிச்சயம் மாறும். கண்டிப்பாக ட்ரை பண்ணிப் பாருங்க..!!
Useful information