மக்களை பெரிதும் பாதிக்கக்கூடிய உடல் நல பிரச்சனைகளில் தலைவலியும் (Headache) ஒன்று. அப்படிப்பட்ட தலைவலி நமக்கு ஏற்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. அதேபோல் தலைவலிகளிலும் பல வகைகள் உள்ளன. அதில் குறிப்பாக மிகவும் கொடுமையான அதேசமயம் தாங்கமுடியாத அளவு வலியை தரக்கூடியது ஒற்றைத் தலைவலி ( migraine pain) .
தலையின் ஒருபுறம் மட்டுமே வலிக்கத் துவங்கும் இந்த ஒற்றைத் தலைவலி (Migraine) 4 மணி நேரம் முதல் சிலருக்கு 72 மணி நேரத்தையும் கடந்து நீடித்து இருக்கும். அந்த அளவு கொடுமையான ஒற்றை தலைவலியால் உலகம் முழுவதும் உள்ள பல மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்களை விட பெண்களையே இந்த ஒற்றை தலைவலி அதிகம் பாதித்தாலும், இருவருக்கும் இடையே அவ்வளவு விகித வேறுபாடு கிடையாது.
சராசரியாக 10 ஆண்களில் ஒருவரும், 5 பெண்களில் ஒருவர் என்ற விகிதத்தில் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். ஒற்றைத் தலைவலி ஏற்படும் போது தலைவலியுடன் குமட்டல், வாந்தி ( Vomit) , கண்பார்வை மங்குதல், அதிக ஒளி மற்றும் ஒலியை பார்த்தால் எரிச்சல், போன்ற பல பிரச்சனைகளும் சேர்ந்தே வரும். பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி கீழ்க்கண்ட காரணங்களால் ( Reason for migraine pain) உண்டாகிறது.
1. பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி ஏற்பட கோபம் (Angry) , பதட்டம், மன அழுத்தம் (Stress) போன்றவை முக்கிய காரணியாக அமைகிறது.
2. சிலருக்கு தூக்கமின்மை (Insomnia) ஒற்றைத் தலைவலியை உண்டாகும்.
3. புதிதாக உணவு கட்டுப்பாடுகளை ( Weightloss Diet) பின்பற்றும் நபர்கள், விரதம் (Fasting) இருப்பவர்களுக்கு ஒற்றை தலைவலி ஏற்படலாம்.
4. வைட்டமின் குறைபாடு( Vitamin Deficiency), உடலின் ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகலாம்.
5. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சமயத்தில் (Menopause) இந்த Migraine பெரும்பாலும் ஏற்படும்.
6. சிலருக்கு பரம்பரையாகவே இந்த Migraine தொடரும்.
இவ்வாறு ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படும் நபர்கள் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது பக்கவிளைவுகளையே உண்டாகும். தற்போது இயற்கையாக வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது என்பதை பார்க்கலாம்.
1. நன்கு காய்ந்த சுக்கு எடுத்துக் கொண்டு அதை சற்று நீர் தெளித்து கல்லில் பூசு மஞ்சள் போல உரசுங்கள். அவ்வாறு உரசி வரும் சுக்கை லேசாக நெற்றியில் வலிக்கும் இடத்தில் பத்து போடுங்கள். 15 நிமிடத்தில் வலி குறைவதை நம்மால் உணர முடியும்.
2. புதினா இலையின் சாறு (Mint Juice) எடுத்து அதையும் நெற்றியில் போடலாம்.
3. 100 மிலி நல்லெண்ணெயில் 4 பூண்டு பல், 5-7 மிளகு சிறிது சீரகம் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறவைத்து வாரம் 1 -2 முறை தேய்த்துக் குளிப்பது நிவாரணம் தரும்
4. வெற்றிலையை இடித்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் கற்பூரத்தை சிறிது பொடியாக்கி கலந்து நெற்றியில் போட வலி பறந்து போகும்.
5. ஒற்றை தலைவலியை போக்கும் குணம் இஞ்சிக்கு (Ginger) உண்டு. எனவே வலி அதிகமாக இருக்கும் போது பால் சேர்க்காமல் இஞ்சி டீ ( Ginger Tea) செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.
6. வைட்டமின் D அதிகம் கொண்ட உணவுகள், காய்கறி பழங்களை தினமும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. என்ன தான் உணவு, மருந்து என எடுத்துக்கொண்டாலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுவது முக்கியம். யோகா, தியானம் (Yoga & Meditation) போன்றவற்றை குறைந்தது தினமும் 30 நிமிடங்கள் செய்வது ஒற்றை தலைவலியை ஓட ஓட விரட்டிவிடும்.
8. டென்ஷன் அதிகமாக இருக்கும் போது மிதமான வெந்நீரில் அரோமா எண்ணெய் சிறு துளி கலந்து பாத் டப்பில் குளிக்கலாம். அல்லது தலையில் நறுமண எண்ணெய்களை தேய்த்துக் கொள்ளலாம்.
9. அதே போல வலி அதிகம் இருக்கும் சமயங்களில் நெற்றி, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
10. இவை அனைத்திற்கும் மேலாக நல்ல தூக்கம் ( Proper Sleep) மிக முக்கியம். ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
இந்த முறைகளை தொடர்ந்து பின்பற்றும் போது எப்பேர்ப்பட்ட ஒற்றைத் தலைவலியாக இருந்தாலும், எவ்வளவு வருடங்களாக இருந்தாலும் உங்களை விட்டு பறந்தோடிவிடும். கண்டிப்பாக ட்ரை பண்ணிப் பாருங்க.