முடி உதிர்வு ( Hair Loss) பொதுவாக பெண்கள் தங்களது கூந்தல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவார்கள். சிறிது தலை முடி கொட்டினாலே ( Hair Fall) பெண்களை கவலை சூழ்ந்து கொள்ளும். ஆனால் தற்போது ஆண்களும் தங்களது தலை முடியை நினைத்து கவலைப்படும் சூழல் அதிகரித்துவிட்டதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஏனெனில் பலரும் ஆண்களின் வயதை அவர்களது முடியை வைத்து மதிப்பிடுகிறார்கள்.. 25 வயது இளைஞன் கூட முன் தலையில் முடி கொட்டி, வழுக்கை விழுந்து 40 வயது ஆள் போன்ற தோற்றத்தை உண்டாக்கி விடுகிறது இந்த முடி உதிர்வு ( Hair Loss Problem) பிரச்சினை.
முன்பெல்லாம் முடி கொட்டி வழுக்கை விழுவதற்கு பரம்பரை காரணமாக இருக்கலாம் என நம்பினார்கள்.. “சரி..!! நம்ம அப்பாவுக்கு வழுக்கை விழுந்த மாறி நமக்கும் விழுந்துடுச்சுனு போல..”னு மனதை தேற்றி கொண்டவர்கள் பல பேர்.. ஆனால் தற்போது கதையே வேறு.. அனைவருக்கும் முடி உதிர்வு பிரச்சனை பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது.
முடி உதிர காரணங்கள் (Reason for Hair Loss)
* உணவு பழக்க வழக்கம்
* அதிக மன அழுத்தம்
* தூக்கமின்மை
* பொடுகு தொல்லை
இது போன்ற பல விஷயங்கள் முடி உதிர்வுக்கு காரணமாக இருந்தாலும் கூட ஹெல்மெட் அணிவதாலும் அதிகளவு முடி உதிர்தல் (Wearing helmet cause hair loss) இருக்கவே செய்கின்றன..
ஏன் ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டுகிறது ? ( Why Wearing Helmet leads to Hair Loss..??) வாங்க.. தற்போது பார்க்கலாம்..
1. ஹெல்மெட் பல மணி நேரம் அணியும் போது முடியின் வேர் கால்களுக்கு சரியான காற்றோட்டம் கிடைப்பது இல்லை.. இதனால் அதிக வியர்வை ஏற்பட்டு பொடுகு (dandruff Hair Loss) பிரச்சனை உண்டாகின்றது.
2. இறுக்கமான ஹெல்மெட் அணியும் போதும் கழற்றும் போதும் கொடுக்கும் அழுத்தத்தால் முடியின் வேர் கால்கள் ( Hair Root Damage) சேதமடைகின்றன.
3. மலிவான விலையில் கிடைக்கிறதே என தரம் குறைவான மெட்டீரியலில் செய்யப்பட்ட ஹெல்மெட்டினை நாம் வாங்கி பயன்படுத்தும் போது அதிக வியர்வையை ஏற்படுத்துவதோடு, வியர்வை ஹெல்மெட்டின் உட்புறம் அதிகளவு படிந்து உங்கள் தலையில் (Fungal Infection in Hair Loss) பூஞ்சை தொற்றினை ஏற்படுத்துகிறது.
அடுத்து என்ன முடி கொட்ட ஆரம்பித்து விடும்..
சரி.. முடி கொட்டுதேனு ஹெல்மெட் அணியாமல் போக முடியுமா..?? ஹெல்மெட் உயிர் காக்கும் விஷயமல்லவா.. அதனால ஹெல்மெட்டும் போடணும்.. முடியும் கொட்ட கூடாது.. அதுக்கு என்ன வழினு இப்போ பார்க்கலாம்..
ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க : (Tips to prevent Hair Loss due to Wearing Helmet)
1. ஹெல்மெட் அணிவதற்கு முன் தலையில் சுத்தமான டவல், கைக்குட்டை ( Kerchief) அல்லது தலை கேப் ( Hair Band) அணிந்து கொண்டு, பின்னர் ஹெல்மெட் அணியலாம்..
2. நீண்ட நேர பயணம் செய்ய வேண்டி இருந்தால் பயணத்திற்கு இடையே வண்டியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஹெல்மெட்டை கழட்டி முடிக்கு காற்றோட்டம் கிடைக்கும் படி செய்யலாம்.. முடிக்கும் காற்றோட்டம் கிடைக்கும்.. நீங்களும் பயணத்திற்கு இடையே சிறிது ஓய்வு எடுத்தது போல இருக்கும்..
3. ஹெல்மெட் வாங்கும் முன் தலைக்கு சரியான அளவில் ஹெல்மெட் இருக்கிறதா என்பதை நன்கு சோதித்து வாங்க வேண்டும்..
4. அடிக்கடி ஹெல்மெட்டை சுத்தம் ( Clean Your Helmet) செய்யுங்கள்..
5. ஈரமான முடியில் ( Wet Hair) ஹெல்மெட் அணியாதீர்கள்
6. தரமான ஹெல்மெட் வாங்குங்கள்
7. முடியை சுத்தமாக வைத்திருங்கள்.. அடிக்கடி வீட்டிலேயே ஹேர் பேக் (Homemade Hair Pack for Hair Loss) தயார் செய்து பயன்படுத்துங்கள்.
சரி.. இப்போ சொன்ன வழிகள் எல்லாம் ஹெல்மெட் அணிந்தாலும் முடி கொட்டாமல் தற்காத்து கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள்.. எங்களுக்கு தான் ஏற்கனவே முடி கொட்ட ஆரம்பிச்சிடுச்சே..!! நாங்க என்ன செய்யுறது னு கேக்குறீங்களா.. அதுக்கும் வழி இருக்கு..
கொட்ட ஆரம்பித்த தலை முடியை சட்டென நிறுத்த ( How to Stop Hair loss immediately due to wearing helmet..? )
மேலே சொன்ன 7 வழிமுறைகளை பின்பற்றுவதோடு இப்போ சொல்ல போகிற வழிமுறைகளையும் ( Best Solution to Stop Hair Loss) சேர்த்து நீங்கள் பின்பற்றுங்கள்..
1. உங்கள் உணவில் அதிகளவு ( Protein foods for Hair Loss)புரோட்டீன், இரும்பு சத்து நிறைந்த கீரைகள், பழங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்..
2. தண்ணீர் நிறைய குடியுங்கள்..
3. மன அழுத்தம் ( Stress & Depression), டென்ஷன் ( Tension) வேண்டவே வேண்டாம்..
4. உடற்பயிற்சி ( Workout) செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்..
5. குறைந்தது வாரம் 1 முறை சின்ன வெங்காய சாறு ( Effective Onion juice for Hair Loss) எடுத்து தலையில் பேக் போல போட்டு 1 மணி நேரம் கழித்து தலையை நன்கு அலசி விடுங்கள்..
6. ஹேர் டிரையர் (Hair Dryers), முடியை ஸ்ட்ரைட்டனிங் ( Hair Straighten Machine Hair Loss) செய்யும் கருவி போன்றவை தலை முடியில் அதிக வெப்பத்தை உண்டாக்கி முடி உதிர்வை அதிகமாக்கும்.. எனவே இவைகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள்..
இந்த வழிமுறைகளை எல்லாம் செய்து பாருங்கள்..!! உங்கள் முடி கொட்டுவது நிக்கிறதோடு மட்டுமில்லாமல் முடி நன்றாக வளரவும் ஆரம்பிக்கும்..
அதோடு மேலே சொன்னபடி சரிவிகித உணவு, உடற்பயிற்சி அனைத்துமே உங்கள் ஒட்டு மொத்த உடம்பிற்கும் ஆரோக்கியத்தை அள்ளி தரும்..
அப்புறமென்ன..!! உங்கள் அழகான அடர்த்தியான பட்டு போன்ற தலை முடியை பார்த்து மற்றவர்களுடைய கண் பட்டுவிட கூடாதே என டிராவல் சமயம் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் நீங்கள் ஹெல்மெட் அணிய வேண்டிய நிலை வந்துடும்னா பார்த்துக்கோங்களேன்..!!!