Natural Homemade Hair Oil for Removal of Lice and Nits Permanently

பேன்கள் (Lice).. தலையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று. பெண்கள் மட்டுமல்லாது குழந்தைகளுக்கும், ஏன் சில ஆண்களுக்கும் கூட பேன் மற்றும் ஈறு (Head Lice and Nits) பிரச்சனை இருக்கும். அதே போல தலைமுடி மட்டுமல்லாது புருவத்திலும் சிலருக்கு இந்தப் பிரச்சனை தோன்றலாம். இந்தப் பதிவில் இயற்கை முறையில் வீட்டிலேயே பேன்களை நிரந்தரமாக விரட்டும் எண்ணெய் தயாரிப்பது எப்படி ( Natural Homemade Hair Oil for Removal of Lice and Nits permanently ) என்பதை பார்க்கப் போகிறோம். 

பேன்கள் தானே.. அது என்ன செய்துவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். சிலரோ தலையில் பேன்கள் இருந்தால் காசு அதிகமாக சேரும் என்றெல்லாம் கூறுவார்கள். முதலில் பேன்கள் எவ்வளவு ஆபத்தானவை என்று பார்க்கலாம். 

பொதுவாக பேன்கள் (Head Lice)  நமது தலையில் சேரும் அழுக்குகளில் இருந்தோ அல்லது ஏற்கனவே பேன்கள் பிரச்சனை இருக்கும் நபர்களில் இருந்து மிக எளிதாக நமக்கு பரவி விடும். ஒரு பேன் ஒரு நாளில் நமது தலையில் கிட்டத்தட்ட 15 முட்டைகள் (ஈறுகள்) Nits வரை இடும் என்று கூறுகிறார்கள். பேன்கள் அவ்வாறு முட்டைகளை இடும் போதே ஒரு திரவத்தை சுரந்து நமது முடியில் வலுவாக அந்த ஈறுகளை ஓட்ட வைத்து விடும். 3 நாட்களில் சிறு பேன்களாக மாறும் ஈறு கிட்டத்தட்ட 7 நாட்களில்  முழு பேன்களாக ( parent Head Lice ) உருமாறுகிறது. 

இத்தகைய பேன்களுக்கு உணவு நமது உடலின் ரத்தம் மட்டுமே. ஒவ்வொரு பேனும் சுமார் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை நமது தலையில் இருந்து ரத்தத்தை உறிஞ்சுவதாகவும், சராசரியாக ஒரு பேன் 1 மாதம் வரை உயிர் வாழும் என்று கூறப்படுகிறது உணவே கிடைக்கவில்லை என்றாலும் பேன்கள் 36 மணி நேரம் வரை உயிர்வாழும் என்றும் கூறப்படுகிறது.

Symptoms of Hair Lice and Nits 

இவ்வாறு நமது தலையில் ரத்தத்தை உறிஞ்சும் போது அதன் எச்சில் நமது தலையில் படும். அதுவே நமக்கு (itching) அரிப்பாக மாறுகிறது. பேன்கள் தலையில் பெருகும் போது, சிறு சிறு சிவப்பு நிற கட்டிகள் ( Red rashes on scalp) தோன்றும். மேலும் தலையை சொரியும் போது நீர் வடிதல் போன்ற பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும். அதோடு அதிகப்படியான பேன்கள் தலையில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும் போது நமக்கு உடல் சோர்வு ( Tiredness), அதிகப்படியான கோபம் ( Hyper Tension), மனஅழுத்தம் ( Stress & Depression) போன்றவை ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

எனவே இவ்வளவு ஆபத்தான பேன்களை இனி நமது தலையில் நாம் வைத்திருக்கலாமா? பேன்களை ஒழிக்க பல வகையான மருந்துகள் (Chemical hair oils for Hair Lice ) கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அதில் கலக்கப்படும் கெமிக்கல் நமது கண்களை பாதிப்பதோடு, அதிகப்படியான முடி உதிர்வுக்கு காரணமாகி விடும். எனவே பேன்களை இயற்கை முறையில் ஒழிப்பதே சிறந்தது. 

பேன்களை நிரந்தரமாக ஒழிக்கும் எண்ணெயை எப்படி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம். 

Procedure to Make Natural Homemade Hair Oil for Lice and Nits Removal

தேவையான பொருட்கள்

                                                                                                              1. தேங்காய் எண்ணெய் – 250 மிலி

( Coconut Oil) 

2. வேப்பிலை – 1 கப் 

                                                                                                                                  (Neem Leaf) 

 

3. துளசி  – 1/2 கப் 

                                                                                                                                     (Tulasi Leaf) 

4. கற்றாழை – 1/4 கப்

                                                                                                                                      (Aloevera) 

5. பூண்டு – 10-15 பற்கள்

(Garlic) 

6. கற்பூரம் – 1 
( Camphor) 

வேப்பிலை மற்றும் துளசி இலைகளை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதனை மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் 10-15 பூண்டு பற்களை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளுங்கள். துவையல் போல மிகவும் மையாக அரைக்காமல் சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கற்றாழையை எடுத்து அதிலிருந்து வரும் மஞ்சள் நிற திரவத்தை நன்கு கழுவி விட வேண்டும். பின்னர் ஓரங்களில் இருக்கும் முட்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். இவ்வாறு நறுக்கப்பட்ட துண்டுகள் கால் கப் அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

ஒரு இரும்பு சட்டியில் 250 மிலி தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதனுடன் அரைத்து வைத்த கலவை மற்றும் நறுக்கி வைத்த கற்றாழை சேர்த்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். அரைத்த கலவை மற்றும் கற்றாழை

நிறம் அனைத்தும் எண்ணெய்யில் இறங்கும். பின்பு அடுப்பை அனைத்து விட்டு எண்ணெயை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே ஆற வைத்து விடுங்கள். 

மறுநாள் காலை அந்த எண்ணெயை ஒரு சுத்தமான பாட்டிலில் வடிகட்டி, ஒரு சூடன் எடுத்து அதை இரண்டாக உடைத்து அந்த எண்ணெய் பாட்டிலில் போட்டு விடுங்கள். சூடன் எண்ணெய் உடன் கரைந்து விடும். அவ்வளவு தான். பேன்களை ஓட விரட்டும் எண்ணெய் ரெடி..

இந்த எண்ணெய்யை தலையின் வேர்கால்களில் ( Scalp) படும் படி நன்கு தடவி, ஈறுகள் அதிகம் இருந்தால் முடிகளிலும் நன்கு தடவி கொள்ளுங்கள். பின்னர் 10 நிமிடங்கள் உங்கள் கைகள் கொண்டு நன்கு மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு 40 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். 40 நிமிடங்களுக்கு பிறகு பற்கள் நெருக்கமாக இருக்கும் சீப்பு கொண்டு வாரினால் தலையில் உள்ள பேன்கள் அனைத்தும் வந்து விடும். பின்னர் மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசி விடலாம்.

வாரம் இரண்டு முதல் மூன்று முறை உங்கள் வசதிக்கு ஏற்ப இந்த எண்ணெய் பயன்படுத்துங்கள். சண்டே வசதியாக இருக்கும். மற்ற நாட்களில் எப்படி செய்வது நேரம் இருக்காது என்ற கவலை வேண்டாம். வேலைக்கு செல்லும் நாட்களில் முதல் நாள் இரவு தலையில் எண்ணெயை தேய்த்து சிறிது மசாஜ் செய்து ஹேர் கேப் போட்டு கொள்ளுங்கள் அல்லது துண்டு கட்டிக் கொண்டு தூங்குங்கள். அன்று மெத்தை, தலையணை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அதில் பேன்கள் இரவு உதிர வாய்ப்பு உண்டு. மேலும் அதில் நீங்கள் தொடர்ந்து தூங்கும் போது மீண்டும் உங்கள் தலைக்கு பேன்கள் எளிதில் வந்துவிடும். 

இந்த எண்ணெய்யில் இருக்கும் வேப்பிலையின் கசப்பு தன்மை பேன்களை அழிப்பதோடு தலையின் அரிப்பையும் நீக்கி விடும். சூடன் மற்றும் பூண்டின் அந்த நெடிக்கு தலையில் உள்ள ஈறுகள் அழிந்து விடும். கற்றாழை முடியின் இழந்த பளபளப்பை மீட்டுத் தரும். 

குறிப்பு : 7 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால் பூண்டை தவிர்த்து விடுங்கள். அதன் காரத்தன்மை சிறிது எரிச்சலை குழந்தைகளின் தலையில் ஏற்படுத்தும். அதேபோல் பூண்டு நெடி பிடிக்காதவர்கள் பூண்டை தவிர்த்து விடுங்கள்

தவிர்க்க வேண்டியவை

1. தலையில் அழுக்கு மற்றும் வியர்வை சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

2. அவ்வப்போது பேன் சீப்புகளை கொண்டு தலையை வாரி ஒன்று இரண்டு பேன்கள் இருக்கும் போதே எடுத்து விடுங்கள். 

3. பேன் தொல்லை இருக்கும் நபர்களது துண்டு, தலையணை பயன்படுத்தாதீர்கள். 

4. தலைக்கு குளிக்கும் போது தலை முடியை ஈரத்துடன் பின்னல் போடாதீர்கள். நன்கு காய வைத்து விடுங்கள். 

கண்டிப்பாக இந்த எண்ணெய் செய்து தேய்த்து பாருங்கள். முதல் முறை பயன்படுத்தும் போதே அரிப்பு போன்ற பிரச்னைகள் நீங்கி பேன்கள் ஒழிய துவங்கும். மேலும் மூன்று முறை பயன்படுத்தும் போதே  நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். பேன் தொல்லை ஒழிந்தாலும் கூட வாரம் ஒருமுறை இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளிக்கும் போது ஜென்மத்திற்கும் பேன்கள் உங்கள் பக்கமே வராது.. ட்ரை பண்ணிப் பாருங்க..!!!!