Most Effective Sun Tan Removal Homemade Herbal Face Pack

இப்போது தான் மார்ச் மாதமே ஆரம்பித்து இருக்கிறது. அதற்குள் வெயில் மண்டையை பிளக்கும் அளவு அடித்து நொறுக்குகிறது. காலை 9 மணிக்கே மதியம் 12 மணி உச்சி வெயில் போல வெயில் அடிப்பதை பார்க்கும் போது, ‘இப்போவே இப்படின்னா.. இன்னும் மே மாசம்லாம் எப்படி வெயிலை சமாளிக்க போறோமோ..!!’ என்று பலருக்கும் ஒருவித பயத்தை வெயில் ஏற்படுத்தி வருகிறது. 

பொதுவாக வெயிலால் முதலில் பாதிக்கப்படுவது நமது சருமம் ( Skin) தான். அதுவும் எவ்வளவு தான் சன் ஸ்கிரீன் ( Sun Screen) போட்டு பாதுகாப்பாக வெளியே சென்றாலும், அரைமணி நேரத்திற்குள் முகமானது (Sun Tanned Skin) கருப்பாகி விடும். அவ்வாறு வெயிலால் பொலிவிழந்து கருப்பாக மாறும் முகத்தின் நிறம் சிலருக்கு அப்படியே Permanent Darkness) தங்கிவிடும். 

அந்தக் கருமையை (Sun Tan Removal) போக்க பேஷியல் ( Facial), ப்ளீச் ( Face Bleach) என செய்வதால் சிலருக்கு அலர்ஜி ( Allergies) , பருக்கள் ( Pimples) போன்ற பிரச்சனைகள் உண்டாகும். அவ்வாறு பார்லர் சென்று பேஷியல் செய்தாலும் அடிக்கும் வெயிலுக்கு அடுத்த நாளே முகம் மீண்டும் கறுத்துவிடும். எனவே இந்தப் பதிவில் வெயிலால் கருப்பாகும் முகத்தை உடனடியாக ஒரே நாளில் பழைய நிறத்திற்கு மாற்றும் அற்புதமான பேக் ( Natural Homemade Sun Tan Removal Face Pack) பற்றி தான் பார்க்கப் போகிறோம் 

வெயிலால் ஏற்பட்ட கருமையை போக்கும் பேக்

Most Effective Homemade Sun Tan Removal Face Pack

தேவையான பொருட்கள்

1. கடலைமாவு  – 1 ஸ்பூன் 

     Besan Flour

2. சந்தனம் / சந்தனபவுடர் – 1/2 ஸ்பூன் 

     Sandal powder 

3. கஸ்தூரி மஞ்சள் –  1/4 ஸ்பூன்

     Wild Turmeric 

4. தயிர் – 1/2 ஸ்பூன் 

     Curd 

5. ரோஸ் வாட்டர் –  1/2 ஸ்பூன்

     Rose Water

6. தேன் – 1/4 ஸ்பூன்

     Honey 

7. எலுமிச்சை சாறு – 10- 15 துளிகள் 

     Lemon Juice Most Effective Sun Tan Removal Homemade Herbal Face Pack

ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் மேலே குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தயிர், ரோஸ் வாட்டர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் ( Paste) போல செய்து கொள்ளவும். கட்டியாக இருந்தால் தேவைக்கு ஏற்ப ரோஸ் வாட்டர் அல்லது தயிரின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இந்த ஹெர்பல் பேக் ( Herbal Face Pack) அவ்வளவு அற்புதமானது. 

முதலில் முகத்தை சாதாரண தண்ணீரால் கழுவி நன்கு துடைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகம் மட்டுமல்லாது கழுத்து பகுதிகளிலும் நன்கு தடவ வேண்டும். 15- 20 நிமிடங்கள் நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும். முதல் முறை செய்யும் போதே உங்கள் முகத்தில் நன்கு மாற்றம் தெரிவதை ( Removing Sun Tan) உங்களால் பார்க்க முடியும். 

இந்தப் பேக், ஆயில் சருமமாக ( Oily skin) இருந்தாலும் வறண்ட (Dry Skin) சருமமாக இருந்தாலும் உபயோகிக்கலாம். எவ்வித பக்க விளைவையும் ( No Side Effects) ஏற்படுத்தாது. இதுவே சென்சிட்டிவ் ( Sensitive)  அல்லது பருக்கள் அதிகம் வரும் ( Acne prone Skin)  சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறின் அளவை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். 

இதில் உள்ள கடலைமாவு மற்றும் தயிர் முகத்தில் படிந்து இருக்கும் தூசி, அழுக்குகளை ( Best Cleanser)  நீக்குவதோடு சருமத்தை மென்மையாக (Soft Skin) ஆக்குகிறது. கஸ்தூரி மஞ்சள் நுண்ணிய கிருமிகளை ( Anti Bacterial)அழிக்கிறது. எலுமிச்சை ப்ளீச்சிங் ஏஜென்ட் ( Bleaching Agent)  ஆக செயல்பட்டு கருமையை போக்குகிறது. ரோஸ் வாட்டர் குளுமையை தருவதோடு சிறந்த டோனர் ( Best Toner)  ஆக பயன்படுகிறது. தேன் சுருக்கம் இல்லாத இளமையான சருமத்தை ( Face wrinkles remover) பெறவும், சந்தனம் வெயிலால் இழந்த நிறத்தை (Skin Brightener) மீண்டும் பெறவும் உதவுகிறது. 

இந்த பேக்கை தினமும் வெயிலில் வெளியே சென்று விட்டு வீட்டுற்கு வந்ததும் பயன்படுத்தலாம். அல்லது காலையில் குளிக்க செல்லும் முன்பு பேக் போல போட்டு காய்ந்ததும் குளித்து விடலாம். வெயிலால் ஏற்பட்ட கருமை ( Sun Tan) மட்டுமல்லாது ஏற்கனவே முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் ( Black Spots), திட்டுகள் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் இந்த பேக் பயன்படுத்தும் போது மறைவதை கண்கூடாக நீங்கள் பார்ப்பீர்கள். 

அப்புறம் என்ன.. வெயில் செஞ்சுரி அடித்தாலும் கவலைப்பட வேண்டாம்.  உங்கள் முகம் அன்று மலந்த தாமரைப்பூ போல ஜொலிக்கும். கண்டிப்பாக ட்ரை பண்ணிப் பாருங்க..!!