How to Remove Unwanted Hair From Face Using Ponnatharam Stone

பெண்களுக்கு இருக்கிற அழகு சார்ந்த பிரச்சனைகள்ல ஒன்னு தான் முகம், கை,கால்கள்ல இருக்குற தேவையற்ற முடிகள் ( Unwanted Hair). குறிப்பா நிறைய பெண்களுக்கு உதட்டுக்கு மேலே மீசை மாதிரி முடிகள் வளரும். சிலருக்கு தாடை பகுதிகள், நெற்றி, கன்னத்தில் கூட அதிகளவு முடிகள் இருக்கும். இதனால் பல பெண்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாவாங்க. 

மேலும் சிலர் பார்லர் போய் தேவையில்லாத முடிகளை த்ரெடிங் பண்ணிக்குவாங்க. ஆனால் என்ன தான் த்ரெடிங், வாக்சிங், ஷேவ் பண்ணாலும் மறுபடியும் முடி வளர தான் செய்யும். அதுவும் முன்ன விட அடர்த்தியா வளர ஆரம்பிக்கும். So இன்னைக்கு தேவையில்லாத முடிகளை நீக்குறதுக்கு ஒரு அருமையான வழியைத் தான் நாம பார்க்கப் போறோம்.  

இந்த பேக்கை ஈஸியா நம்மலாள பண்ண முடியும். எந்த வித Side Effect இதுல இருக்காது. அதோட அருமையான பலனை நமக்கு கொடுக்கும். சரி வாங்க.. தேவையில்லாத முடிகளை நீக்குற பேக் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.

1. Unwanted Hair Removal Pack 

தேவையற்ற முடிகளை நீக்கும் பேக்

தேவையான பொருட்கள்

1. பொன்னாதாரம் கல்

2. தண்ணீர் 

பொன்னாதாரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கொஞ்சம் விலை அதிகமா இருக்கும். ஆனா நல்ல ரிசல்ட் கொடுக்கும். பொன்னாதாரம் மஞ்சள் கலர்ல கல் மாதிரி இருக்கும். நம்ம சுண்டு விரல் அளவு கல்லு 100 ரூபாய் கிட்ட சொல்லுவாங்க. கிட்டத்தட்ட 1 மாசம் இந்த கல்லு வரும். So ஒரு மாசத்துக்கு 100 ரூபாய் செலவு பண்ணுறது அவ்ளோ கஷ்டம் இல்ல. இதுவே நீங்க ஆன்லைன் ல பாத்தீங்கன்னா 100கிராம் பொன்னாதாரம் பொடி 700 ரூபாய் கிட்ட வரும். அதுனால கல் வாங்கிக்குறது தான் நல்லது. விலை குறைவானதும் கூட.

இந்த பொன்னாதாரம் கல்லை சந்தனம் அல்லது மஞ்சள் உரசுர கல் இருந்தா அதுல லேசா கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு உரசுங்க. பொன்னாதாரம் கல்லா இருந்தாலும் ஈஸியா தேய்க்க முடியும். அப்படி கல்லுல தேய்க்கும் போது வர பேஸ்ட் முகத்துல எங்க முடி இருக்கோ அங்க Apply பண்ணுங்க. அப்படியே ஒரு 30 நிமிடங்கள் விட்டுடுங்க. காய்ந்ததும் அதை உதிர்த்து விட்டுட்டு தண்ணீர் வச்சு கழுவிடுங்க. அல்லது இரவு படுக்க போகும் போது தேய்த்துவிட்டு காலையில கழுவிடுங்க. 

இதற்குப் பிறகு சிறிது எலுமிச்சை சாறை அந்த இடத்தில் தடுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடுவதை  நம்மலாள கண்கூடாக பார்க்க முடியும். முகத்துல இருக்குற தேவையற்ற முடிகளை நீக்க பல வழிமுறைகள் சொல்லப்பட்டாலும் இந்த பொன்னாதாரம் அற்புதமான பலனைக் கொடுக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க. அற்புதமான ரிசல்ட்டை நீங்களே பார்ப்பீங்க.