ஆடைகளை பொறுத்தவரை “கலர் நல்லா இருக்கா..?? டிசைன் நல்லா இருக்கா..? விலை எவ்ளோ..?? என்று மட்டும் பார்த்துவிட்டு நாம் ஆடைகளை வாங்கி விடுகிறோம். அதைத் தாண்டி நாம் பெரிதாக உடைகளை பற்றி யோசிப்பது இல்லை. ஆனால் நாம் குண்டாக, குட்டையாக, ஒல்லியாக உயரமாக, இருக்கிறோமா என்பதை பொறுத்தே நாம் ஆடைகளை செலக்ட் செய்ய வேண்டும்.
அதிலும் குண்டாக இருக்கும் பெண்களுக்கு ( Dresses for Fat Women) உடைகள் வாங்குவது கஷ்டமாகவே இருக்கும். அவர்கள் உடலுக்கு ஏற்ற Size-ல் உடைகள் சிலருக்கு எளிதாக கிடைக்காது. இதனால் கிடைப்பதை வாங்கி அணிந்து கொள்ளும் சில பெண்களும் இருக்கிறார்கள். உடைகள் வாங்கும் போது அவர்களுக்கே அவர்கள் மீது வெறுப்பு வரும் நிலை கூட ஏற்பட்டு விடும்.
இந்த பதிவில் எவ்வாறு பெண்கள் உடல்வாகுக்கு ஏற்ற வகையில் ஆடைகளை தேர்ந்து எடுப்பது என்பதை பார்க்க போகிறோம். How to Choose Dresses for Fat Women..??
1. குண்டாக இருக்கும் பெண்கள் வழுவழுப்பான ஆடைகளை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் அவை உடலோடு ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. இதனால் உடலின் அமைப்பு அப்படியே தெரிவதால் மேலும் குண்டாக தெரிய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் காட்டன் துணி (Cotton Cloth) போன்ற வகைகளை தேர்ந்து எடுங்கள். காட்டன்லாம் எனக்கு பிடிக்காது, இந்த மாதிரி வழவழ உடைகள் தான் அணியப் பிடிக்கும் என்று கூறும் பெண்களாக இருந்தால் வழவழப்பு குறைவான மெட்டீரியல் செலக்ட் பண்ணுங்கள். மட்கா, மால்குடி சாப்ட்சில்க் போன்ற மெட்டீரியல்களில் உங்கள் ஆடைகளை தேர்ந்தெடுங்கள்.
2. குண்டாக இருக்கும் பெண்கள் லைட் கலர் உடைகளை விடுத்து Dark கலர் உடைகளை பெரும்பாலும் வாங்குங்கள். பொதுவாக Dark கலர் உடைகள் நம்மை சற்று ஒல்லியாக காட்டும்.
3. அதே போல் பூ, இலை போன்ற டிசைன்களில் நீங்கள் டாப்ஸ் ( Tops) வாங்கும் போது, சிறிய பூக்கள் டிசைன் வாங்காமல் பெரிய பூக்கள், டிசைன் உள்ள ஆடைகளை தேர்ந்து எடுக்கும் போது இன்னும் கொஞ்சம் ஒல்லியாக தெரிவீர்கள்.
4. குண்டாக இருக்கும் பெண்கள் இறுக்கமான உடைகளையும் தவிர்த்து விடுங்கள் அதே போல மிகவும் தொள
தொள ஆடைகளை அணியாதீங்க. துவைத்த பிறகு உடைகள் சுருங்கினாலும் நமது உடம்புக்கு சரியாக இருக்கும் படியான Tops அணிந்து கொள்ளுங்கள்
5. கட்டம் போட்ட ( Checked Tops) டாப்ஸ் அல்லது புடவைகளை ( Checked Sarees) நீங்கள் வாங்கும் போது சிறிய கட்டத்தை விட சற்று பெரிய கட்டத்தை தேர்ந்து எடுப்பது சற்று ஒல்லியாக உங்களை காட்டும்.
6. இதுவே நீங்கள் குண்டாக குட்டையாக இருக்கும் நபர்களாக இருக்கும் பட்சத்தில், கோடுகள் இருக்கும் Tops வாங்குகிறீர்கள் ( Striped Tops) என்றால் நீள வாக்கில் கோடுகள் ( ||||) இருக்குற உடைகளை ( Vertical Striped Tops or Shirts) அணியுங்கள். இவ்வாறு அணியும் போது உயரமாக தெரியுவீர்கள். இதுவே வாக்கில் கோடுகள்( Horizontal Striped Shirt or tops) இருக்கும் போது குட்டையாக உயரம் குறைந்து நம்மைக் காட்டும்.
7. லெகின் போன்ற பேண்ட் ( Leggings) வகைகளை குண்டான பெண்கள் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் லெகின் பேண்டுகள் கனமாக இருக்கும் உங்கள் தொடைகளை இன்னும் குண்டாக காட்டும். அதே போல் இடுப்பு, வயிறு போன்ற பகுதிகள் பிதுங்கியது போல் தெரியும். லெகின் போட தான் பிடிக்கும், அது தான் வசதியாக இருக்கும் என நினைத்தால், Tops கொஞ்சம் நீளமாக சிறிது லூசாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது உயரம் குட்டையான Tops நீங்கள் அணிந்து கொள்ள போகிறீர்கள் என்றால் பாட்டியாலா பேண்ட் ( Patiyala Pant) அணிந்து கொள்ளுங்கள்.
8. கைகள் மிகவும் குண்டாக இருக்கும் பெண்கள் Sleeve Less உடைகள் Short Sleeve உடைகளை தவிர்த்து விடுங்கள். முக்கால் கை அல்லது முழுக்கை உடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நேர்த்தியாக உங்கள் உடலுக்கு ஏற்ற வகையில் உடைகளை தேர்ந்தெடுத்து, நீங்கள் அணியும் போது உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும். அதேபோல சரியான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியும் போது நம்மிடம் உள்ள மைனஸ்களை நிச்சயமாக நம்மால் பிளஸ்களாக மாற்ற முடியும். கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.