கோடை காலம் ( Summer Season).. நம்மில் பலரும் “ஏன்டா கோடைகாலம் வருது..!!” என எண்ணுவது உண்டு.. காரணம் நம்மை வாட்டி வதைக்கும் வெயில்.. தாங்க முடியாத அளவு அனல் காற்று.. இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு வழியாக்கி விடும்..
இப்படி வெயில் கொளுத்தினாலும் வெளியே செல்லாமல் நம்மால் இருக்க முடியுமா.. வேலை, அலுவலகம், சொந்த விஷயம் போன்ற பல காரணங்களுக்காக நாம் வெளியே சென்று தானே ஆக வேண்டும்.. இது ஒருபுறம் இருக்க, சம்மர் விடுமுறை வேறு.. குழந்தைகள் “அங்கே போகணும்.. இங்கே போகணும்..!!” என அடம் பிடித்து நம்மை வெளியிலே அழைத்து சென்று விடுவார்கள்..
என்னதான் கோடையை சமாளிக்க உடலுக்கு உள்ளே மோர், இளநீர், பழச்சாறு என வகை வகையாக குடித்தாலும், வெளிப்புறம் நாம் அணியும் ஆடைகள் கோடை காலத்தில் (Best Summer Wears) முக்கிய பங்கு வகிக்கின்றன.. நம் உடலை கோடை உஷ்ணத்திலிருந்து பாதுகாக்க ஆடைகளே நமது முதல் காக்கும் கவசம்..
சரி.. கோடையை சமாளிக்க எந்த விதமான ஆடைகளை அணியலாம் என்பதை தற்போது பார்ப்போம்.. ( Best Summer Wear for Ladies)
1. பல நன்மை தரும் பருத்தி ஆடைகள்
கோடை என்றாலே முதலில் வந்து நிற்பது பருத்தி ஆடைகள் தான் ( Cotton Dress for Summer). குறிப்பாக பெண்கள் பருத்தியினால் நெய்யப்பட்ட உடைகளை கோடை காலத்தில் உடுத்துவது தான் நல்லது..
பருத்தி ஆடைகள் ஏன் சிறந்தது என்றால், உடைகள் கனமாக இல்லாமல் லேசாக இருக்கும்..
மேலும் கோடை வெயிலால் உடலில் உண்டாகும் வியர்வையை பருத்தி ஆடைகள் முழுதும் உறிஞ்சி விடுகின்றன.. அதுமட்டுமில்லாமல் உடையிலேயே வியர்வையை சேர்த்து வைக்காமல் வெளியேற்றியும் விடுகின்றன.
பருத்தியினால் ஆன புடவைகள் ( Summer Cotton Saree) பெஸ்ட்.. புடவை அணிய இயலாதவர்கள் பருத்தியினால் ஆன சுடிதார், சட்டை, பாவாடை போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்..
2. வண்ணத்தில் கவனம்..!!
பொதுவாக கோடை காலத்தில் பளிச் என்ற அடர் வண்ண நிறங்களிலான ஆடைகளை ( Avoid Dark Colour dresses in Summer) தவிர்த்து விடுங்கள்.. அதுவும் குறிப்பாக கருப்பு நிற ஆடைகள். பொதுவாகவே கருப்பு நிறத்திற்கு வெயிலை உட்கிரகிக்கும் தன்மை உண்டு. இதனால் உடலின் உஷ்ணம் அதிகரிக்கும்..
எனவே வெள்ளை, பிங்க் போன்ற ( Try Light Colour dresses in Summer) வெளிர் நிற உடைகளை தேர்தெடுத்து அணியுங்கள்..
3. வேண்டாமே..!! இறுக்கமான உடைகள்.!!
கொளுத்தும் வெயிலில் இறுக்கமான உடைகளை நாம் அணியும் போது நமது உடலில் எரிச்சலை உண்டாக்கும்.. மேலும் இறுக்கமான உடைகள், வியர்வையை உடலைவிட்டு வெளியேற முடியாதபடி செய்து தோல் பிரச்சனைகளையும் உண்டாக்கி விடும்.. எனவே முடிந்தவரை தளர்வான உடைகளை அணியுங்கள்..
“நான் ஏற்கனவே சிறிது குண்டாக தோற்றமளிக்கிறேன்.. ரொம்ப தளர்வான ஆடைகள் போட்டா இன்னும் குண்டா தெரியுவேனே..!!” என கவலைப்படும் பெண்களுக்கு தான் இந்த டிப்ஸ்..
நீங்கள் உடைகள் அணியும் போது பிளைன் ஆக இருக்கும் உடைகளை அணியாமல் ‘ஸ்டிரைப்ஸ்’ போன்ற நீள வாக்கில் கோடுகள் போட்ட ஆடைகளை அணியுங்கள்.. இது உங்களை சற்று ஒல்லியாக காட்டுவதுடன் சற்றே உயரமாகவும் காட்டும்.. அதே போல சிறிய பூக்கள் போட்ட ஆடைகள் அணியாமல் கொஞ்சம் பெரிய பூக்கள் அல்லது பெரிய டிசைன் ஆடைகளையும் தாங்கள் அணியலாம்.. ‘செக்டு’ போல கட்டம் போட்ட ஆடைகளும் உங்களுக்கு நல்ல தேர்வாக அமையும்..
4. லெகின்-னுக்கு பை-பை..!!
எல்லா வயதில் இருக்கும் பெண்களுக்கும் சரி.. எத்தகைய உடல்வாகு உடைய பெண்களுக்கும் சரி.. மிகவும் விருப்பமான ஆடை என்றால் அது லெகின் ( Leggings) தான்.. பல வண்ணங்களில் லெகின் பேண்ட் வாங்கி வைத்து கொண்டால் போதும்.. எல்லா விதமான டாப்ஸ், குர்தா மற்றும் அனைத்து விதமான சுடிதார் வகைகளுக்கும் லெகின் பேண்ட்டினை அணிந்து கொள்ளலாம்..
ஆனால் சம்மர் காலத்தில் மட்டும் ( No Leggings in Summer Time) இறுக்கமான லெகின் பேண்ட்டிற்கு பை-பை சொல்லிடுங்க.. அதற்கு பதில் காட்டன் துணியால் ஆன சாதாரண பேண்ட் அல்லது ‘பட்டியாலா பேண்ட்’ பயன்படுத்தலாம்..
5. இரவிலும் இதை பண்ணுங்க..!!
கோடை காலத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் இரவில் வெயில் மட்டும் தான் இருக்காது.. மத்தபடி வியர்வையும் வெட்கையும் அப்படியே தான் இருக்கும்.. எனவே இரவிலும் இறுக்கமான டிராக் பேண்ட், டி-சர்ட் அணியாமல் தளர்வான காட்டன் நைட்டி, மற்றும் இலேசான இரவு நேர உடைகளை அணிந்து கொள்ளுங்கள்
6. பாதிப்பை உண்டாகும் பாலிஸ்டர்
துணி வகைகளில் சிந்தடிக், பாலிஸ்டர் ரக துணி வகைகளால் ஆன உடைகளை கோடை காலத்தில் அறவே தவிர்த்து விடுங்கள்.. மேலும் ஜீன்ஸ் பேண்ட் கூட அணிவதை தவிர்க்கலாம்.. இப்போதெல்லாம் ஜீன்ஸ் தவிர்க்க முடியாத ஆடையாக இருந்தாலும் கூட கடுமையான வெயில் காலத்தில் இதனை ஒதுக்குவதே நல்லது..
இதுமட்டும் இல்லாமல் சுத்தமான துணிகளை அணியுங்கள்.. வெயில் காலமாக இருப்பதால் சட்டை போன்றவற்றை ஒருமுறைக்கு மேல் துவைக்காமல் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.. சட்டை மற்றும் டாப்ஸ் போன்றவற்றில் படிந்திருக்கும் வியர்வை தோல் நோய்களை உண்டாக்க கூடும். எனவே நன்கு துவைத்து, வெயிலில் காயவைத்த சுத்தமான ஆடைகளையே கோடை காலத்தில் அணியுங்கள்..
அப்புறம் என்ன..!! கோடை காலத்தை குஷியாக உங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்தபடி உற்சாகமாக கொண்டாடுங்க..!!