ஒருவரது முகத்தில் எப்போதும் இருக்கும் புன்னகை அவரது முகத்தின் அழகை மேலும் மெருகேற்றும். நாம் பேரழகு கொண்டிருந்தாலும் முகத்தில் சிரிப்பு இல்லை எனில் முகமானது களை இழந்துவிடும். எனினும் சிலர் சிரிக்க தயங்குவதுண்டு. இதற்கு முக்கிய காரணம் பற்களின் நிறம் தான். முதலில் பற்களின் நிற மாற்றம் என்பது சிறிய பிரச்னையாக இருந்தாலும் நாளடைவில் பற்களின் மஞ்சள் நிறம் மற்றும் பற்கள் கறையானது நிரந்தரமாகிவிடும்.
பற்களின் நிறமாற்றத்திற்கான காரணங்கள்
How to Whiten Teeth Naturally at Home
1. காபி, தேநீர் போன்றவற்றை அடிக்கடி அருந்துதல்
2. புகைப்பிடித்தல்
3. வெத்தலை பாக்கு, புகையிலை அடிக்கடி உபயோகிப்பது
4. தொடர்ந்து மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளுவது
5. அடிக்கடி பற்களின் சுத்ததிற்காக மருத்துவரிடம் பிளீச் செய்து கொள்வது.
மஞ்சள் கறையை நீக்க இயற்கை வழிகள்
1. தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம்
2. உப்பை அதிகளவு பயன்படுத்தாமல் சிறிது எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது நீர் மிகவும் குறைந்த அளவு எலுமிச்சை சாற்றின் துளி கலந்து பற்களை தேய்க்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.. பல்லின் கறை முழுதும் அகன்றுவிடும்.
3. உப்பு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்து சுத்தமான சாம்பலை கொண்டு வாரம் ஒருமுறை பற்களை சுத்தம் செய்யலாம்.
4. இரவில் தூங்குவதற்கு முன்பாக ஆரஞ்சுப்பழத் தோலை எடுத்துக்கொண்டு பற்களை தேய்த்து வருவதால் கறைகள் நீங்கும்.
5. நல்லெண்ணெய் 1 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை வாயில் ஒரு 10 நிமிடம் வைத்திருந்து கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்யும் போது பற்களில் உள்ள சொத்தை நீங்குவதுடன் பற்களின் மஞ்சள் நிறமும் மாறும்.
5. ஒரு சிறிய கிண்ணத்தில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் ஆக்கி கொள்ள வேண்டும்.பின்பு இந்த கலவையை டூத் பிரஸ் கொண்டு பற்களில் தடவி 2 நிமிடங்களுக்கு பிறகு வாயை சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதே போல 10 நாட்களுக்கு ஒருமுறை செய்யும் போது பற்களில் இருக்கும் மஞ்சள் கறை மற்றும் பல்லின் அசிங்கமான காரை நீங்கி பற்கள் பளிச்சென வெள்ளையாக மாறும்.
6. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலவையை எடுத்துக்கொண்டு டூத் ப்ரஷ் பயன்படுத்தி 5 நிமிடம் பற்களை மென்மையாக தேய்க்க வேண்டும். பின்பு வழக்கம் போல பேஸ்ட் கொண்டு பற்களை துலக்குங்கள். பலனை கண்கூடாக பார்க்கலாம்.
7. வாழைப்பழ தோலின் சிறு துண்டுகளை எடுத்துக்கொண்டு பற்களை மென்மையாக இரு நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்கும் போது பல்லின் கறைகள் நாளடைவில் மங்குவதைக் காணலாம்.
8. கொய்யா இலைகள் கிடைத்தால் அடிக்கடி அதனை மெல்லுங்கள். அல்லது அதனை பேஸ்ட் போல அரைத்தும் பற்களை வாரம் இருமுறை தேய்க்கலாம்.
9. தினமும் பல் துலக்கும் முன்பாக பேஸ்டுடன் 2-3 துளி ஆரஞ்சு ஆயில் சேர்த்து எப்போதும் போல் பற்களை துலக்குங்கள். இவ்வாறு காலை மாலை என இரு வேளைகளும் ஒருவாரத்திற்கு செய்யும் போது பற்களின் மஞ்சள் நிறம் மாறி வெண்மையாக தோற்றமளிக்கும்.
10. டூத் பிரஷில் பேஸ்ட் எடுத்துக்கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை தூவிக் கொள்ளுங்கள். பின்பு அதனைக் கொண்டு பற்களை தேய்க்கும் போது மஞ்சளின் ஆண்டி பாக்டீரியல் தன்மை பற்கள் மற்றும் ஈறுகளில் உள்ள தொற்றுக்களை அகற்றி வாய் துர்நாற்றத்தை போக்குவதோடு பல்லின் நிறத்தையும் மீட்டுத்தரும்.