குளிர்காலம் வந்துட்டாலே நம்ம முடி நம்மளோட பேச்சை சுத்தமா கேட்காது. குளிர்காலம் தான, ஜில்லுனு இருக்கும், அதுனால முடி நல்லா ஈரப்பதமா ஆரோக்கியமா இருக்கும்னு நீங்க நினைப்பீங்க. ஆனா குளிர் காலத்துல உங்க முடி ஓட ஈரப்பதத்தை குளிர்க்காற்று உறிஞ்சிடும். அதுனால முடி வறண்டு போய், ஒரு பக்கம் பொடுகு, இன்னொரு பக்கம் முடி உடைஞ்சு கொட்ட ஆரம்பிச்சிடும்.
குளிர்காலத்தை நம்மலாள மாத்த முடியாது. ஆனா குளிக்காலத்தை நம்மளால கண்டிப்பா சமாளிச்சு நம்ம முடியை ஆரோக்கியமா வச்சுக்க முடியும். அதுவும் ஈஸியா வீட்டுல இருந்துட்டே.
இன்னைக்கு பதிவுல நாம 2 குளிர்கால ஹேர் மாஸ்க் ( Winter Hair Mask) பார்க்க போறோம். ஒரு Mask பொடுகுக்காக ( Dandruff). இன்னொரு மாஸ்க் முடியோட வறட்சியை ( Dry Hair) நீக்கி மென்மையா பளபளப்பாக ( Smooth & Shining Hair) மாற்றும். அதுவும் பார்லர் போகாமலே நம்ம முடியை மாடல் மாதிரி வச்சுக்க முடியும்.
Winter Hair Mask – 1 ( Dandruff – பொடுகு)
தேவையான பொருட்கள்
1. வேப்பிலைபொடி – 2 ஸ்பூன் ( Neem powder )
2. தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் ( Coconut Oil )
3. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் ( Lemon Juice )
4. வைட்டமின் E Capsule – 2 ஸ்பூன்
5. கற்றாழை ஜெல் – 2 ஸ்பூன் ( Aloevera Gel)
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் வேப்பிலை பொடியை எடுத்துக் கொண்டு அதில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 வைட்டமின் கேப்ஸுல் உடைத்து அதன் உள்ளே இருக்கும் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி மாஸ்க் செய்ய வேண்டும்.
இந்த மாஸ்க்கை தலை Scalpல நல்லா Apply பண்ணுங்க. 30- 45 நிமிஷம் நல்லா காய்ந்ததும் சீயக்காய் இல்லனா ரொம்ப கெமிக்கல் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசிடுங்க. வாரம் இரண்டு முறை இந்த மாஸ்க்கை நீங்க பயன்படுத்தலாம். இதை பண்ணும் போது நிரந்தரமா உங்க தலையில இருந்து பொடுகு மறைஞ்சிடும். அதோட தொடர்ந்து வாரம் இரண்டு முறை பண்ணும் போது வாழ்க்கை முழுசும் பொடுகு உங்க பக்கத்துலயே வராது.
இப்போ 2வது ஹேர்மாஸ்க் பார்க்கப்போறோம். உங்க முடி நுனியில உடைஞ்சு, வறண்டு போய் இருக்கா. அதோட முடி அதிகமா குளிர் தாங்காம கொட்ட ஆரம்பிக்கிதா. உங்க வறண்ட முடியை மென்மையா பட்டு போல மாத்துறதோட மட்டும் இல்லாம பார்லர் போய் முடியை Smoothening பண்ண மாதிரி பளபளப்பாகவும் உங்க முடியை மாத்திடும்.
Winter Hair Mask – 2 ( Smooth & Shining)
தேவையான பொருட்கள்
1. மஞ்சள் வாழைப்பழம் ( Banana) – 1 ஸ்பூன்
2. தேன் ( Honey) – 1 ஸ்பூன்
3. பாதாம் எண்ணெய் (Almond Oil) – 2 ஸ்பூன் or தேங்காய் எண்ணெய் ( Coconut Oil)
4 வைட்டமின் E கேப்ஸுல் – 2 ஸ்பூன்
ஒரு பாத்திரத்தில வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக்கோங்க. இல்லனா மிக்சில அரைச்சுக்கோங்க.
வாழைப்பழ கூழ் கூட இப்போ 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்துக்கோங்க. பாதாம் எண்ணெய் முடிக்கு நல்ல பளபளப்பை கொடுக்கும். பாதாம் ஆயில் இல்லனா தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
அதோட ஒரு சிலர் தேன் முடியிலபட்டா முடி வெள்ளையா மாறிடும்னு பயப்படுவாங்க. ஆனா அப்படி ஏதும் ஆகாது. தைரியமா முடிக்கு சுத்தமான தேன் பயன்படுத்தலாம். இந்த கலவையோட வைட்டமின் E கேப்ஸுல் உள்ள இருக்கிற எண்ணெய் சேர்த்து நல்லா Mix பண்ணிக்கோங்க. நம்ம மாஸ்க் ரெடி.
இந்த மாஸ்க் நல்லா தலை ஸ்கேல்ப், முடின்னு முழுசும் Apply பண்ணுங்க. அதோட முடி உடைஞ்சு இருக்குற நுனி பகுதில நல்லா Apply பண்ணுங்க. அப்படியே 30 நிமிடங்கள் விட்டுட்டு தலைக்கு கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்பு போட்டு குளிச்சிடுங்க.
முடியை நல்லா காய வச்சிட்டு பார்த்தீங்கன்னா பட்டு போல மென்மையாவும் இருக்கும். பளபளப்பா ஜொலிக்கவும் செய்யும். இந்த மாஸ்க் தொடர்ந்து வாரம் இரண்டு முறை செஞ்சா போதுமானது. நீங்க பார்லர் போகவே தேவையில்லை. உங்க முடி ஹீரோயின்கள், மாடல்கள் மாதிரி பளபளன்னு மின்னும்.
Note : இந்த 2 மாஸ்க்ல ஏதாவது ஒன்னு மட்டும் பயன்படுத்தப் போறீங்கன்னா வாரம் இரண்டு முறை பண்ணுங்க. இதுவே 2 மாஸ்க்கும் சேர்ந்து பயன்படுத்தப்போறீங்கனா Hair Mask 1 ஒரு நாளும் Hair Mask 2 வந்து இன்னொரு நாளும் Use பண்ணுங்க. So 2 மாஸ்க்கும் வாரத்துல ஒருதடவை Use பண்ணா போதும்.
குளிர்காலத்துல கூட உங்க முடியை பார்த்து நீங்களே கண்ணு போடுற அளவு உங்க முடி அவ்வளவு அழகா மாறிடும். மறுபடியும் சொல்றேன்.இது பெண்களுக்கு மட்டும் இல்ல. ஆண்களும் பயன்படுத்தலாம். கண்டிப்பா ட்ரை பண்ணிப் பாருங்க.