5 Natural Homemade Remedies for Dark Circles

நமது முகத்தில் ஏற்படும் முக்கியமான அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம் (Dark Circle). முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் கண்களுக்கு கீழே சிறிய அளவில் கருவளையம் இருந்தாலும் முகத்தின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்து விடும். முன்பு 40 வயது கடந்த நபர்களுக்கு வயதின் காரணமாக ஏற்பட்ட கருவளையம் தற்போது டீன் ஏஜ் வயது நபர்களையும் விட்டு வைக்காதது தான் சோகம். 

பொதுவாக நமது கண்களுக்கு கீழே மற்றும் கண்களை சுற்றி இருக்கும் சருமமானது மிகவும் Soft ஆக ( Sensitive) இருக்கும். மேலும் நாம் கண்களுக்கு அதிக அளவு வேலை தரும் போது, கண்களுக்கு கீழே இருக்கும் சருமானது விரைவிலேயே சோர்வு அடைந்து நாளடைவில் கருவளையமாக மாறிவிடுகின்றது. 

இதற்கு முக்கிய காரணமாக அமைவது அதிக நிறம் டிவிபார்ப்பது, தொடர்ந்து லேப்டாப், கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது, இருட்டில் மொபைல் போன்களை பயன்படுத்துவது, தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் அதிகமிருக்கும் அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவது போன்றவை ஆகும். எனினும் நாம் அசால்ட்டாக விடும் பட்சத்தில் கருவளையம் நமக்கு தீவிர பிரச்சனையாக மாறி நிரந்தரமாக 

5 Natural Home-made Remedies for Dark Circle

கண்ணுக்கு கீழே கருமை தங்கிவிடும். 

அதோடு பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தற்போது கருவளைய பிரச்சனையால் அவதியுறுகின்றனர். எனினும் எளிதாக நம்மால் இந்த கருவளையaத்தை விரட்ட முடியும். அதுவும் பார்லர் செல்லாமல், வெறும் 7 நாட்களிலேயே நம்மால் எளிதாக வீட்டிலேயே கருவளையத்தை குணப்படுத்தி விட முடியும்.

வாங்க.. கருவளையத்தை விரட்டக் கூடிய வழிகளை பார்க்கலாம். 

1. உருளைக்கிழங்கு ( Potato)

பொதுவாக உருளைக்கிழங்கு ஒரு Bleaching Agent ஆக செயல்படுகிறது. எனவே கருமை நிறத்தை போக்கக்கூடியத்தில் உருளைக் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு முழு உருளைக் கிழங்கை எடுத்துக்கொண்டு அதனை தோலுடன் அரைக்க வேண்டும். நீர் சேர்க்க அவசியம் இல்லை. அரைத்த உருளைக்கிழங்கை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். 

இந்த உருளைக்கிழங்கு சாறை காட்டன் பஞ்சில் தொட்டு மெதுவாக கருவளையம் இருக்கும் இடத்தில் Apply செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி விடவேண்டும். உருளைக் கிழங்கு சாறு மட்டுமல்லாது தினமும் வேலை முடிந்து ஓய்வு எடுக்கும் நேரங்களில் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி அந்த துண்டை இரண்டு கண்களுக்கு மேலே வைக்கலாம். கண் எரிச்சல், கண் சோர்வை உடனடியாக நீக்கும் ஆற்றல் படைத்தது உருளைக்கிழங்கு. 

2. கடுக்காய் ( Kadukkai) 

கருவளையத்தை 7 நாட்களில் விரைவில் போக்கக்கூடியது கடுக்காய். கடுக்காய் நாட்டு மருந்து கடைகள் மற்றும் சில  பலசரக்கு கடைகளில் கிடைக்கும். விலையும் மிக குறைவாகவே இருக்கும். இந்த கடுக்காயை எடுத்துக்கொண்டு மஞ்சள் அல்லது சந்தனம் உரசும் கல்லிலோ அல்லது சொரசொரப்பான தரையிலோ சிறிது நீர் சேர்த்து தேய்க்க வேண்டும். கடுக்காய் நன்றாக  சந்தனம் போல குழைந்து வரும். 

இந்த கடுக்காய் பேஸ்ட்டை எடுத்து மெதுவாக கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கும் இடங்களிலும், கண்ணுக்கு மேலே மெதுவாக தடவவும். ஒரு 20 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் கழுவி விடலாம். இதை தொடர்ந்து 7 நாட்கள் செய்யும் போது உங்க Dark Circle இருந்த இடம் தெரியாமலேயே மறைஞ்சிடும்

3. குங்குமாதி தைலம் ( Kungumathi Thailam) அல்லது விளக்கெண்ணெய் (Castor Oil)

குங்குமாதி தைலம் சூப்பரான ரிசல்ட் உங்களுக்குத் தரும். ஆன்லைனிலும் பல சூப்பர் மார்க்கெட்டுகளிலும்  தற்போது குங்குமாதி தைலம் கிடைத்தாலும் சில போலி பிராண்டுகளும் இருக்கின்றன. எனவே பிராண்ட் பார்த்து வாங்குங்கள் அல்லது ஹெர்பல் கடைகளில் விசாரித்து வாங்குங்கள். 

குங்குமாதி தைலம் விலையைப் பொறுத்தவரை குறைந்த பட்சம் 150 முதல் 200 ரூபாய் வரை வரலாம். பிரண்டுகளை பொறுத்து 200 ரூபாய்க்கு மேலும் இருக்கும். விலை அதிகமாக இருக்கிறது என நினைப்பவர்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். இதுவும் நல்ல பலனைத் தரக்கூடியது. இரண்டு எண்ணெய்களையுமே இரவு தூங்க செல்லும் முன்பு கண்களில் தடவி சிறிது மசாஜ் செய்து விட்டு தூங்கிக் கொள்ளலாம். 

4. வாழைப்பழ தோல்

என்ன வாழைப்பழத் தோலா என்று நீங்கள் நினைக்கலாம். ஆம்.. வாழைப்பழத்திற்கு சமமான சத்து வாழைப்பழ தோல்களிலும் உண்டு. வாழைப்பழ தோல்களை எடுத்துக் கொண்டு இரண்டு பக்கமும் இருக்கும் காம்புகளை வெட்டிவிட்டு நமது கண்ணுக்கு ஏற்ப அளவாக தோலை வெட்டி நன்றாக 10- 15 நிமிடங்கள் மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடலாம். 

வாழைப்பழ தோலில் இருக்கும் பொட்டாசியம் சத்து கருவளையத்தை நீங்குவதுடன் கண்ணுக்கு நல்ல பளபளப்பை தரக்கூடியது. கருவளையம் இல்லை என்றாலும் கூட மறக்காமல் வாழைப்பழம் சாப்பிடும் போதெல்லாம் தோலை தூக்கிப் போடாமல்  தோலை கண்கள் மற்றும் முகத்திற்கும் தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். முகம் ஜொலிப்பதை  பார்த்து நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். 

5. புதினா சாறு

சுத்தமான புதினா இலைகளை எடுத்துக்கொண்டு அதனை மண் இல்லாமல் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். அதை சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை நன்கு வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இந்த சாறை காட்டன் பஞ்சினால் தொட்டு கண்களை சுற்றிலும் கருவளையம் இருக்கும் பகுதிகளில் மெதுவாக தடவவும். மீதம் புதினா சாறு இருந்தால் அதனை ஒரு சிறிய பாட்டிலில் விட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். 3 நாட்கள் முதல் 1 வாரம் வரை கெட்டுப்போகாது. 

5 Natural Home-made Remedies for Dark Circle

கவனிக்க வேண்டியவை

1. தினமும் 7-8 மணி நேரம் தூங்குங்கள்

2. இருட்டில் செல்போன் பயன்படுத்தாதீர்கள் 

3. அதிகமாக தண்ணீர் குடியுங்கள்

4. கடினமான டயட்டுகள் ( Diet) நீங்கள் பின்பற்றினாலும் தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள்

5. கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாதீர்கள். 

பிறகு என்ன இந்த வழிமுறைகளை கண்டிப்பாக செய்து பாருங்கள். பெண்கள் மட்டும் இல்லை. ஆண்களும் நிச்சயமாக இந்த முறைகளை  ட்ரை பண்ணலாம். 7 நாட்களில் கண்டிப்பாக கருவளையம் குட்பை சொல்லிட்டு ஓடிப்போயிடும். அப்புறம் காந்த கண்ணழகி… காந்த கண்ணழகா..னு நம்ம கண்களை பார்த்து நாம ஜாலியா பாட்டுப் பாடலாம்.