இதற்கு முக்கிய காரணம் காற்றுப் படாத இடங்களான அக்குள், தொடை இடுக்கு, கழுத்து, பெண்களுக்கு பாவாடை கட்டும் இடம், மேலாடையின் பட்டை உடலில் படும் இடங்கள் போன்ற அந்தரங்க பகுதிகளில் வியர்வை ஏற்பட்டு, அழுக்கு சேர்ந்து, இறந்த செல்கள் அங்கேயே படிவதால் கருமை நிறம் ஏற்படுகிறது. முதலிலேயே இதை கவனித்து சில வழிமுறைகளை பின்பற்றினால் எளிதாக மறையும். ஆனால் பலரும் இந்தக் கருமையை கண்டு கொள்ளாமல் விடுவதால் நிரந்தரமாக அந்தப் பகுதிகளில் இருக்கும் தோல் அதன் நிறத்தை ( Dark Skin) மொத்தமாக இழந்து விடுகின்றது.
இந்தப் பதிவில் நாம் ஒரு வாரத்திலேயே கருமையை நன்கு குறைக்கக்கூடிய 2 வழிகளை ( ப்ளீச் மற்றும் பேக்) பார்க்கப்போகிறோம். இதில் ஒன்று உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்கும். இரண்டாவது உங்கள் சருமத்தின் இழந்த நிறத்தை மீட்டுத் தரும். இந்த இரண்டு முறைகளையும் தொடர்ந்து செய்யும் போது ஒரே வாரத்தில் உங்களால் கருமை நீங்குவதை கண்கூடாகப் பார்க்க முடியும்.
Step : 1 Turmeric Bleaching ( மஞ்சள் பிளீச்சிங்)
தேவையான பொருட்கள்
1. தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
( Coconut Oil)
2. கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன்
( Turmeric)
3. எலுமிச்சை சாறு – 5 துளிகள்
( Lemon Juice)
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் அதில் 5 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். இந்த கலவையை எங்கு கருமை உள்ளதோ ( அக்குள், தொடை இடுக்கு, கழுத்து) அந்த பகுதியில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.
இவ்வாறு செய்யும் போது, மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தில் நன்றாக ஊடுருவி பளபளப்பு தன்மையை கொடுக்கிறது. அதேபோல எலுமிச்சை சாறு நல்ல ஒரு பிளீச்சிங் ஏஜென்ட் ஆக செயல்படும். இதனை நன்றாக மசாஜ் செய்ததும் கழுவ தேவையில்லை. அப்படியே இரண்டாவது Step செய்யலாம்.
Step : 2 Cofffee Pack
தேவையான பொருட்கள்
1. அரிசி மாவு – 1 ஸ்பூன்
( Rice Flour)
2. தக்காளி சாறு – 2 ஸ்பூன்
( Tomato Juice)
3. சர்க்கரை – 1/2 ஸ்பூன்
( Sugar)
4. காபி தூள் – 1/2 ஸ்பூன்
( Coffee Powder)
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் அரிசி மாவை எடுத்துக்கொண்டு அதில் 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1/2 ஸ்பூன் சர்க்கரை, 1/2 ஸ்பூன் காபி தூள் கலந்து ஒரு பேஸ்ட் போல செய்து கொள்ளவும். வேண்டும் என்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளலாம்.
இந்த கலவையை முதல் step முடிந்ததும் அப்படியே continue பண்ணலாம். கழுவ வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கலவையை வெறும் விரல்களை கொண்டோ அல்லது தக்காளி சாறு எடுத்தது போக மீதமிருக்கும் தக்காளித் தோலைக் கொண்டு தொட்டு கருமை படர்ந்த இடத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யுங்கள்.
தக்காளிச் சாறில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. அதேபோல் காபி பொடி மற்றும் சர்க்கரை இறந்த செல்களை நீக்கி சருமத்தின் பழைய நிறத்தை மீட்டுக் கொடுக்கும். இதை தொடர்ந்து நீங்கள் 3 நாட்கள் செய்யும் போதே நல்ல முன்னேற்றத்தை காணலாம். சில நாட்களாக தான் கருமை நிறம் உள்ளது எனில் 1 வாரத்தில் மொத்தமும் மறைந்து விடும். இதுவே நாள்பட்ட கருமை எனில் 15 நாட்கள் முதல் 1 மாதத்தில் மறைந்துவிடும்.
இதற்காக கண்ட கண்ட க்ரீம்களை பயன்படுத்தாமல் இந்த Turmeric Bleach மற்றும் Coffee Pack (2 Steps) Follow பண்ணுங்க. பெண்களுக்கு மட்டும் கிடையாது. தாராளமாக ஆண்களும் இந்த முறையை பயன்படுத்தலாம். எப்படிப்பட்ட கருமை நிறத்தையும் மறைந்துவிடும். கண்டிப்பாக ட்ரை பண்ணிப் பாருங்க.