நாம பருவ வயதுக்கு வந்ததும் நமக்கு கிடைக்கிற முதல் பரிசு பருக்கள் ( Pimples) தான். கிட்டதட்ட 90% அதிகமான ஆண் பெண்களுக்கு பருவ வயசுல பருக்கள் கண்டிப்பா வந்துருக்கும். ஆனா கொஞ்ச நாட்கள்ல மறைஞ்சு போயிடும். ஆனா சிலருக்கு ரொம்ப அதிகமா வர பருக்கள் அப்படியே தழும்பா மாறி போயிடும்.
என்னவோலாம் பண்ணி பருக்களை சரிபண்ணிடுவாங்க. ஆனா அதோட தழும்பு மறையாம முகத்துல அப்படியே தங்கிடும். இதுநால பலரும் வருத்தப்டுவது உண்டு. இன்னும் சிலருக்கோ பருவ வயதை கடந்தும் அதிகளவு எண்ணெய் சுரப்பு காரணமாக பருக்கள் வந்து கொண்டே இருக்கும். Don’t Worry பிரெண்ட்ஸ். கவலையை விட்டுத் தள்ளுங்க.
இந்த பதிவுல நாம நீண்ட நாட்களா முகத்துல இருக்குற பருக்களோட தழும்புகளையும், கரும் புள்ளிகளை மறைய வைக்கக்கூடிய 2 Face Packs பார்க்க போறோம். இந்த 2 Face packs வீட்டுல கிடைக்குற பொருட்களை வச்சு ரொம்ப ஈஸியா பண்ணலாம்.
1. கற்றாழை உருளை பேக்
தேவையான பொருட்கள்
1. கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
( Aloe Vera )
2. உருளை கிழங்கு ஜூஸ் – 1 ஸ்பூன்
( Potato Juice)
3. வைட்டமின் E மாத்திரை – 2
(Vitamin E Tablet )
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்துக்கோங்க. உங்க வீட்டுல கற்றாழை செடி இருந்தா அதுவே எடுத்துக்கலாம். இல்லைனா கடையில கற்றாழை ஜெல் வாங்கிக்கோங்க. இதோட 2 வைட்டமின் E மாத்திரை எடுத்து அதுக்கு உள்ள இருக்கிற எண்ணெய் ஊத்திக்கோங்க. அதோட 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணுங்க. நல்லா தொடர்ந்து 2 நிமிஷம் மிக்ஸ் பண்ணதும் அது ஜெல் மாதிரி மாறிடும். இந்த பேக் எங்கல்லாம் தழும்புகள் இருக்கோ அங்க தடவி நல்லா மசாஜ் பண்ணுங்க.
இந்த பேக் பொதுவா ராத்திரி உபயோகப்படுத்துங்க. முகத்துல தடவி மசாஜ் பண்ணதுக்கு அப்புறமா 30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடுங்க. 7 நாட்கள் தொடர்ந்து செய்யும் போது உங்க முக தழும்புகள் மறையுறதை கண்கூடா பார்ப்பீங்க.
உருளைக்கிழங்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றும். மேலும் கற்றாழை வைட்டமின் E ஆனது முகத்தின் தழும்புகளை குறைத்து சருமம் பழைய நிலைக்கு மீண்டு வர உதவுகின்றது.
2. பட்டை பேக்
இதுவும் ரொம்பவே Effective ஆன பேக்.
தேவையான பொருட்கள்
1. பட்டை – சிறிய துண்டு
( Cinnamon Stick )
2. கிராம்பு – 4
( Cloves )
3. தக்காளி ஜூஸ்- 1 ஸ்பூன்
( Tomato Juice)
பட்டை மற்றும் கிராம்பு இரண்டையும் எடுத்துக்கொண்டு பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை எங்கெல்லாம் பருக்களின் தழும்புகள் உள்ளதோ அங்கு மட்டும் தடவினால் போதுமானது. முகம் முழுவதும் தடவ வேண்டிய அவசியம் இல்லை.
30 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவ வேண்டும். இதில் இருக்கும் பட்டை மற்றும் கிராம்பு கலவை Anti inflammatory மற்றும் anti bacterial தன்மை கொண்டவை. மேலும் தக்காளி பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகளை போக்குவதுடன் சருமத்தின் ( Open Pores) துளைகளையும் அடைக்கின்றது.
இந்த 2 pack ட்ரை பண்ணி பாருங்க. ஆண்கள், பெண்கள்னு யாரு வேணும் னாலும் இந்த பேக் செஞ்சு பார்க்கலாம். கண்டிப்பா ஒரு வாரத்துல பருக்களின் தழும்புகள் மறையுறதை நீங்க பார்ப்பீங்க..!!