இருந்தாலும் அடிக்கடி துவைக்க வேண்டாம், போட்டுக்க ஈஸியா இருக்கு, ஈஸியா வண்டி ஓட்ட முடியும், ஒரு ஜீன்ஸ் இருந்தா அதுக்கு எல்லா சட்டைகளும் போட்டுக்கலாம் இதுமாதிரி காரணங்கள்னால பலரும் ஜீன்ஸ் அணிவதை விரும்புறாங்க.
இப்படி 500 – 2000 ரூபாய் வரை செலவு பண்ணி ஆசையா வாங்கி போட்டுக்குற ஜீன்ஸ் சீக்கிரமே பழசு ஆகி வெளுத்துப் போகும் போது பலருக்கும் அது கண்டிப்பா வருத்தமா தான் இருக்கும். இந்தப் பதிவுல எவ்ளோ வருஷம் ஆனாலும் எப்போதுமே ஜீன்ஸ் பேண்ட் பழசு ஆகாம புதுசா வைச்சுக்குறது எப்படின்னு பார்க்கப் போறோம்.
How to keep your Jeans Pant from Fading :
பெரும்பாலும் துவைக்கும் போது நாம செய்யுற தவறுகள் தான் ஜீன்ஸ் பேண்ட் பழசா போக முக்கிய காரணம். So அதுக்கு நாம Follow பண்ண வேண்டிய சில டிப்ஸ்களை இங்க பார்க்கலாம்.
1. முதல்ல நாம செய்ய வேண்டியது ஜீன்ஸ் பேண்ட் துவைக்கும் போது பேண்ட் ஓட உள் பக்கம் வெளியில இருக்குரமாறி திருப்பி போட்டுட்டு துவைக்கணும். இதுனால பேண்ட் வெளிப்பக்கம் வெளுத்துப் போகாம பளீச்சுன்னு இருக்கும்.
2. அதேபோல பலருக்கும் பேண்ட் வாங்கும் போது இருக்குற அந்த Fit போக போக குறைஞ்சு Size மாறி போயிடும். So துவைக்கும் போது பேண்ட் ஓட பட்டன், ஜிப்லாம் சரியா மாட்டிட்டு அப்புறமா துவைக்கும் போது பேண்ட் ஓட Size மாறாது. வாங்கும் போது என்ன Fit இருந்ததோ அதே Fit ல இருக்கும்.
3. இதுவே நீங்கள் வாஷிங் மெஷின்ல துவைக்க போகிறீர்கள் என்றால் ஜீன்ஸ் துணி ( Jeans pant Cloth material) எதனால் ஆனது என்பதைப் பார்த்து, பேண்ட்ல ஏதேனும் துவைக்கும் போது Follow பண்ண வேண்டிய குறிப்பு இருந்தால் அதை கவனத்தில் வைத்துக்கொண்டு துவைக்க வேண்டும்.
4. அதேபோல Dryer ல் நீங்கள் உலர்த்த போகிறீர்கள் என்றால் அதிக நேரம் Dryer ல் போட வேண்டாம். லேசாக ஈரம் இருக்கும் போது Dryer ல் இருந்து எடுத்து கொடிக் கம்பி அல்லது கேங்கரில் தொங்க விட்டு உலர்த்துங்கள்.
5. ஒரு போதும் சூடான நீரில் அலச வேண்டாம். அது ஜீன்ஸ் பேண்ட்டை சுருங்க வைக்கும். அதிலும் காட்டன் அதிகம் கலந்த ஜீன்ஸ் ( Cotton Jeans pant) எனில் இன்னும் அதிகம் சுருங்கும்.
6. சாதாரண சோப் அல்லது துவைக்கும் பொடி பயன்படுத்துங்கள். ப்ளீச் சார்ந்த பொடிகளை துவைக்க பயன்படுத்துவது ( Bleach) ஜீன்ஸ் துணி நூலின் உறுதியை குறைத்துவிடும். இதனால் விரைவில் பழையதாகவும், கிழியவும் வாய்ப்பு உண்டு.
7. அதேபோல சூரிய ஒளியில் நேரடியாக உலர்த்த வேண்டாம். பேண்ட் வெளிப்புறத்தை உட்புறமாக திருப்பி உலர்த்துங்கள்.
8. துவைக்கும் முன்பு ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்து விட்டு துவையுங்கள். தொடர்ந்து பேப்பர் போன்ற
பொருட்களோடு சேர்த்து ஜீன்ஸ் பேண்ட் துவைக்கும் போது ஜீன்ஸ் பேண்டின் தரத்தை நாளடைவில் அது குறைத்துவிடும்.
இதுபோன்ற சின்ன சின்ன வழிமுறைகளை பின்பற்றி பாருங்கள்.. உங்களுக்கு புடிச்ச ஜீன்ஸ் பேண்ட் வருஷம் ஆனாலும் எப்போதும் புதுசா அழகா இருக்கும்… கண்டிப்பா இந்த முறைகளை ட்ரை பண்ணிப் பாருங்க..!!